தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

ட்ரான்ஸ்பரன்டாக இருக்கும் ஜப்பான் பொது கழிப்பறைகள்! - transparent public toilets in japan tokyo

ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரத்தில் உள்ள ஷிபுயா என்னும் பகுதியில் வெளிப்படையாக இருக்கும் பொதுக் கழிப்பறைகள் மக்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. அது குறித்து பார்க்கலாம் வாங்க...

transparent public toilets in japan tokyo
transparent public toilets in japan tokyo

By

Published : Aug 22, 2020, 10:23 AM IST

பொது கழிப்பறைகள் வெளிப்படையானவையாக (transparent) இருப்பதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? ஒருவேளை நினைத்திருப்பீர்களானால் நிச்சயம் முகம் சுளித்திருப்பீர்கள். ஆனால் அந்த நினைப்பை நனவாக்கியிருக்கிறது ஜப்பான்.

ஆம். ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் உள்ள ஷிபுயாவில் இந்ந வெளிப்படையான கழிப்பறைகள் உள்ளன. ஷிகெரு பன் என்னும் கட்டடக் கலைஞர்தான் இந்த வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்திருக்கிறார். ஒவ்வொரு கழிப்பறையையும் ட்ரான்ஸ்பரன்டான கண்ணாடியில் (அதுவும் வண்ண வண்ண கண்ணாடிகளில்) வடிவமைத்திருக்கிறார். இந்தக் கழிவறைகள் ஷிபுயாவில் உள்ள யோயோஹி ஃபுகமச்சி பொது பூங்காவில் நிறுவப்பட்டுள்ளன.

ட்ரான்ஸ்பரண்ட் கழிப்பறைகள்

எவரெஸ்டில் கழிவறைகள் அமைத்து தரும் சீனா

அது எப்படி வெளிப்படையான கழிப்பறையை ஒருவர் உபயோகப்படுத்த முடியும் என நீங்கள் நினைக்கலாம். அதில்தான் ட்விஸ்ட் இருக்கிறது மக்களே! கழிப்பறையை உபயோகிக்கும் நபர் அதில் நுழைந்து கதவை பூட்டியவுடன் இந்த வெளிப்படையான கண்ணாடி ஒளிபுகாதவாறு எல்லாவற்றையும் மறைத்துக்கொள்கிறது. அது எப்படி இருக்கும் என்ற சேம்பிள் புகைப்படத்தை கீழே காணுங்கள்.

ஒளிபுகா வண்ணம் மறைத்துக்கொள்ளும் கழிப்பறை

எதற்காக மெனக்கெட்டு இதுபோன்ற கழிப்பறைகளை உருவாக்குகிறார்கள் என்ற நம் கேள்விக்கும் பதில் வைத்திருக்கிறார்கள். பொது கழிப்பறைகள் எந்த அளவிற்குத் தூய்மையாக இருக்கிறது, கழிப்பறைக்குள் ஆள் இருக்கிறாரா என்பதை அறியவே இவை ட்ரான்ஸ்பரண்டாக இருக்கிறது என்கிறார்கள்.

இந்தக் கழிப்பறைகள் இரவில் வண்ணமயமாக ஜொலிக்கின்றன. மாற்றுத்திறனாளிகள், ஆண், பெண் என மூவருக்கும் இந்தக் கழிப்பறைகள் உள்ளன. இவற்றை உபயோகப்படுத்தவும் எளிமையாக இருக்குமாம். டோக்கியோ கழிப்பறைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் கழிப்பறைகளை நிப்பான் நிறுவனம் நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கழிப்பறைக்கு உள்ளே

இதையும் படிங்க... இனி கழிப்பிடம் செல்லக்கூட வழிகாட்டும் 'கூகுள்'!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details