தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்! - டெல்டா

ஆகஸ்ட் இறுதியில் கோவிட் மூன்றாம் அலை தாக்கக் கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவர் கூறினார்.

Third wave may hit country around August end: Dr Samiran Panda
Third wave may hit country around August end: Dr Samiran Panda

By

Published : Jul 17, 2021, 9:56 AM IST

டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்று நோய்கள் துறைத் தலைவர் டாக்டர் சமீரன் பாண்டா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ஆகஸ்ட் இறுதியில் கோவிட் மூன்றாம் அலை தாக்கக் கூடும் என எச்சரித்தார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்று நோய்கள் துறைத் தலைவர் டாக்டர் சமீரன் பாண்டா

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒவ்வொரு மாநிலமும் தொற்றுநோய்களை ஆராய்வது மற்றும் அங்குள்ள கோவிட்-19 நிலைமை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது முக்கியம்.

ஆகஸ்ட் இறுதியில்...

கரோனா வைரஸின் முதல் மற்றும் இரண்டாவது அலைகள் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்திய மாநிலங்கள் உள்ளன. இப்போது கட்டுப்பாடுகள் தொடராவிட்டால் இந்த மாநிலங்கள் மூன்றாவது அலைகளால் கடுமையாக பாதிக்கப்படலாம்.

இளசுகளே உஷார்- கோவிட் 3ஆம் அலை!

அதேநேரம் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டால் மூன்றாம் அலையை தடுக்கலாம். ஏனெனில், மூன்றாவது அலை இரண்டாவது அலைகளை விட தவிர்க்க முடியாதது அல்ல. கோவிட் மூன்றாம் அலை ஆகஸ்ட் இறுதியில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

சமீரன் பாண்டா வேண்டுகோள்

மூன்றாவது அலை எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. மேலும், இரண்டாம் அலையும் இன்னமும் முடியவில்லை” என்றார்.

தொடர்ந்து அதிக கோவிட்-19 பாதிப்புகள் உள்ள சில மாநிலங்களைப் பற்றி பேசிய டாக்டர் பாண்டா, “தொற்று நோய் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. பன்முகத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. ஆகவே மாநிலங்களின் தரவுகளை ஆராய்ந்து எந்த கட்டத்தில் தொற்று நோய்கள் உள்ளன என்ற தரவுகளை நாம் பார்க்க வேண்டும். பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : மூன்றாம் அலை- டெல்டா அறிகுறிகள் என்னென்ன?

ABOUT THE AUTHOR

...view details