தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

என்ன விளக்கு ஏத்தலாம்... தீபாவளி விளக்குகளைத் தேர்ந்தெடுக்க சில டிப்ஸ்! - Jar Lights

இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க திட்டமிட்டுள்ளீர்கள் எனில், இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்...

தீபாவளி விளக்கு
தீபாவளி விளக்கு

By

Published : Nov 11, 2020, 10:49 AM IST

வண்ண வண்ண விளக்குகளால் ஒளியேற்றி இருளைப் போக்கும் பண்டிகை தீபாவளி. இந்தப் பண்டிகையில் ஒவ்வொரு வீடும் விளக்கொளியில் பிரகாசமாகவும், பட்டாசு கானத்தோடும் திருவிழாக் கோலம் பூண்டுவிடும். இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள் எனில் இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்.

பால்கனி விளக்குகள்

சைக்கிள் டயர் (அ) ஏதேனும் ஒரு வளையத்தில் மின்விளக்கை வலிமையான நூலைக் கொண்டு கட்டித் தொங்க விடலாம். காண்பதற்கு தொங்கட்டான் விளக்குகள் போலிருக்கும் இவ்விளக்குகளை எளிமையாக செய்துவிடலாம்.

தொங்கும் விளக்கு

வீட்டில் தோட்டம் அல்லது பால்கனி அமைப்பு இருந்தால் அங்கு சீரியல் மின் விளக்குகளை படரவிடலாம். மின் விளக்குகளின் ஒளி செடிகளின் மீது படும்போது பிரகாசமான தோற்றத்தைத் தரும்.

பாட்டில் விளக்குகள்

வீட்டில் தேவையற்ற பாட்டில்கள் இருப்பின் அவற்றில் சீரியல் மின்விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்கலாம். பாட்டில்கள் மீது மின்விளக்குகள் ஒளிரும்போது புதிய வண்ணம் பிறக்கும்.

பாட்டில் விளக்குகள்

ஜாடி விளக்குகள்

ஜாடிகளுக்குள் சிறிய அகல் விளக்கை ஏற்றி வைப்பது பார்க்க எளிமையாகவும், ஒருவித அமைதி மனநிலையையும் ஏற்படுத்தும். இந்த ஜாடியின் வெளிப்புறத்தில் பூங்களைக் கொண்டு அழகுபடுத்தலாம். இவ்விளக்குகள் வீட்டின் உள்புறத்தில் வைக்க சிறந்தத் தேர்வு.

ஜாடி விளக்கு

வளையல் விளக்கு

இந்த விளக்குகள் பல வண்ணங்களிலான கண்ணாடிகளை ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டி உருவாக்கப்படும். வளையங்கள் வெப்பத்தைத் தாங்கும் என்பதால் நடைமுறையில் பயன்படுத்தலாம்.

வளையல் விளக்கு

சீரியல் மின் விளக்குகள்

பல வண்ணங்கள் கலந்தும் கிடைக்கும் இந்த விளக்குகளை விரும்பும் இடத்தில் படர விடலாம். விலையும் குறைவு.

மர விளக்குகள்

இந்த விளக்குகள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும். இவற்றை மரத்தில் பொருத்துவது கொஞ்சம் கடினம் தான் என்றாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். தொங்கும் வகையில் இருக்கும் இந்த விளக்குகளை விரும்பும் வடிவத்தில் வாங்கலாம்.

மர விளக்கு

பேப்பர் லாம்ப்

பேப்பர் பேக்குகளில் பேட்டரி பயன்படுத்தி, எரியும் மெழுகு விளக்குகள் கொண்டு இவை வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பேப்பர் லாம்ப்

இதையும் படிங்க:மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details