தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

நெகட்டிவ் எண்ணங்கள் சாதனைகளுக்கு வழிவகுக்கும்.. ஆனால் உடல் நலத்தில்.? ஆய்வில் புதிய தகவல்.. - நெகட்டிவ் எண்ணங்கள் பாதிப்புகள்

நெகட்டிவ் எண்ணங்கள் சாதனைகளுக்கும், வெற்றிகளுக்கும் ஊந்துதலாக செயல்படும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

நெகட்டிவ் எண்ணங்கள் சாதனைகளுக்கு வழிவகுக்கும் ஆய்வில் புதிய தகவல்
நெகட்டிவ் எண்ணங்கள் சாதனைகளுக்கு வழிவகுக்கும் ஆய்வில் புதிய தகவல்

By

Published : Mar 5, 2023, 1:58 PM IST

வாஷிங்டன்:அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள American Psychological Association என்னும் உளவியல் ஊடகத்தின் Journal of Personality and Social Psychology இதழில் நெகட்டிவ் எண்ணங்கள் மனித வாழ்க்கையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வை இங்கிலாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற எசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குழு நடத்தி உள்ளது.

Journal of Personality and Social Psychology இதழில் வெளியிடப்பட்டவை பின்வருமாறு. பொதுவாக, நெகட்டிவ் எண்ணங்கள் மன உளைச்சல், செயலில் நாட்டமின்மை உள்ளிட்டவைகளுக்கு வழிவகுக்கும். எதிர்காலத்தை பற்றிய பயத்தையும், அன்றாட வாழ்க்கையை வெற்றிகரமாக கடப்பதிலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கேள்விப்பட்டிருப்போம். பல்வேறு செய்திகளில் படித்திருப்போம். யூடியூப் வீடியோக்களில் பார்த்திருப்போம். இந்த நெகட்டிவ் எண்ணங்கள் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குழுவும் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் வியக்கத்தக்க முடிவுகள் தெரியவந்துள்ளன. அதாவது, மனித வாழ்வில் வெற்றியைத் தூண்டும் 12 விதமான உணர்ச்சிகளை அறிவியல் பூர்வமாக நெகட்டிவ் எண்ணங்கள் தூண்டுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. நெகட்டிவ் எண்ணங்கள் கவலை மற்றும் கோபத்துக்கு வழிவகுத்தாலும், அதிகப்படியான செயல்திறனை தூண்டிவிடுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், நெகட்டிவ் எண்ணங்கள் மனிதனின் மூலோபாய சிந்தனையில் பற்றாக்குறையும், மோசமான உடல் நல பாதிப்புகளையும் ஏற்படுத்துவதையும் பேராசிரியர் குழு கண்டறிந்துள்ளது. ஆகவே, நெகட்டிவ் எண்ணங்கள் தலைவலி, குமட்டல், முதுகுவலி, தூக்கமின்மை போன்ற மன அழுத்தம் தொடர்பான உளவியல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து ஆய்வு குழுவின் தலைவரும் பேராசிரியருமான ரெய்ன்ஹார்ட் பெக்ரூன் கூறுகையில், "நேர்மறை எண்ணங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்களை கொண்ட 2 மாணவர்கள் ஒரு தேர்வை எதிர்கொண்டால், நேர்மறை மாணவர் எதிர்மறை மாணவரை விட அதிக மதிப்பெண் பெறுவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எதிர்மறை மாணவர் ஒருபோதும் மற்ற சில மாணவர்களை போல தேர்வில் தோல்வியடைய மாட்டார் என்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, மாணவர்கள் தோல்வியடைந்து விடுவோமோ என்ற எதிர்மறை எண்ணங்களால் படிக்க ஆரம்பித்து விடுவார். இந்த 2 எண்ணங்களும் இல்லாத மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தாலும் கவலைப்படுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதேபோல போலத்தால் வாழ்க்கையின் அனைத்து செயலாக்கங்களிலும் எதிர்மறை எண்ணங்களை கொண்டவர்கள் தோல்வியை காண மாட்டார்கள். அதன் மீதான பயத்தில் வெற்றிக்கு அருகேலேயே இருப்பார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த எண்ணங்கள் தேர்வுகள், நேர்காணல்கள், வறுமை, கடினமான சூழ்நிலைகளில் ஒரு மனிதனுக்கு பக்கபலமாக இருக்கிறது. இது ஒருவர் இன்பமாக இருக்கும்போது அடையும் வெற்றிகளைவிட அதிகமாக வெற்றிகளை அடையவும் சிலருக்கு வழிவகுக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இந்த எண்ணங்களில் நன்மைகள் இருப்பினும், மனநலப் பிரச்சினைகள், நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டில் பின்னடைவு இருப்பதை மறுக்க முடியாது. குறிப்பாக நீண்ட கால உடல் மற்றும் மனநல பிரச்சனைகளுக்கும் இது வழிவகுக்கிறது. ஆகவே, எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த முயற்சிகளை எடுப்பது நல்ல தீர்வாகும் எனத் தெரிவித்தார். இந்த உளவியல் ஆய்வில் பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தன்னார்வளர்கள் என 1,000 பேர் இடம்பெற்றனர். பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நான்கு வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டது. இவர்களின் தகவல்கள், எண்ணங்களை பகுப்பாய்வு செய்து, இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:சிக்கன் Vs மட்டன்: எது ஆரோக்கியத்திற்கு கேடு.?

ABOUT THE AUTHOR

...view details