தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

கேன்சர் பரவலில் முக்கியப்பங்காற்றும் செல்களின் திரவம்!

செல்களைச் சுற்றியுள்ள செல்லுலார் திரவத்தின் நடமாட்ட பாகுத்தன்மை அதிகரிக்கும்போது, அது புற்றுநோய் செல்களை அடிப்படை கட்டி பகுதியிலிருந்து உடலிலுள்ள மற்ற பகுதிகளுக்கு பரவச்செய்யுமென சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கேன்சர் பரவலில் முக்கிய பங்காற்றும் செல்களின் திரவம்...!
கேன்சர் பரவலில் முக்கிய பங்காற்றும் செல்களின் திரவம்...!

By

Published : Nov 3, 2022, 8:35 PM IST

வாஷிங்டன்(அமெரிக்கா): செல்களைச் சுற்றியுள்ள செல்லுலார் திரவத்தின் நடமாட்டத்தின் பாகுத்தன்மை அதிகரிக்கும்போது, அது புற்றுநோய் செல்களை அடிப்படை கட்டி பகுதியிலிருந்து உடலிலுள்ள மற்ற பகுதிகளுக்கு பரவச்செய்யுமென சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வின் தலைமை ஆய்வாளர் கோன்ஸ்டாண்டினோஸ் கோன்ஸ்டாண்டோபௌலோஸ் கூறுகையில், 'ஆரோக்கியமான மற்றும் நோய்வாய்பட்டவர்களின் உடல்களில் ஏற்படும் பல்வேறு கட்ட திரவ பாகுத்தன்மைக்கு செல்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்.

மேலும், செல்கள் இந்த திரவ பாகுத்தன்மைகளுக்கு முன்னால் வெளிப்படும்போது அதனால் நினைவை உருவாக்க முடியும் என்பதைக்காண்பித்துள்ளோம். இந்த ஆய்வு பிற துறைகளைச்சார்ந்த ஆய்வாளர்களையும், திரவ பாகுத்தன்மையை செல்களின் எதிர்வினைகளை முறைப்படுத்த பயன்படுத்தச்செய்யும்” என்றார்.

மேலும், இதுகுறித்து இந்த ஆய்வை இயற்றியவர்களின் முதன்மையானவரான டாக்டர் கௌஸ்டவ் பேரா கூறுகையில், “பாகுத்தன்மையான திரவங்களில் தொடர்ந்து எதிர்ப்பு இருந்துவரும் வரை, புற்றுநோய் செல்கள் வெளியாகாது என நம்பப்பட்டு வந்தது. ஆனால், அதை நாங்கள் பொய்யாக்கியுள்ளோம்” என்றார்.

சாதாரண செல்கள் மற்றும் புற்றுநோய் செல்கள் வெளியிடும் பெரும் புரதக் குறைபாடால் செல்களின் கூடுதல் பாகுத்தன்மையை அதிகப்படி ஆக்கிறது என்றார். “இது அதிகபட்ச பாகுத்தன்மைக்குக்கீழ் உள்ள செல்கள் உடற்பயிற்சி செய்து, தன் வலுச்சதைகளான ஆக்டின் மற்றும் மியோசினை வளர்ப்பது போன்றது” என இந்த ஆய்வில் பங்கேற்ற டாக்டர் செல்மா செர்ரா கூறியுள்ளார்.

இந்த ஆய்வுகுறித்து இதன் தலைமை ஆய்வாளர் கோன்ஸ்டாண்டோபௌலோஸ் கூறுகையில், “ இந்த ஆய்வு நமக்கு நிறைய தகவல் தரும் வண்ணம் இருக்கும். மேலும், புற்றுநோய் செல்கள் எப்படி அடிப்படை புற்றுநோய் கட்டியிலிருந்து அதிகபட்ச செல் திரவ பாகுத்தன்மைகளில் நோய் பரவலின்போது எப்படி மாற்றம் அடைகிறது என்பதையும் அந்தக் கட்டி எப்படி தோல்களின் திசுக்களினுள் செல்கிறது என்பதைப்பற்றியும் இந்த ஆய்வின் மூலம் கண்டறிய முடியும்” என்றார்.

,இதையும் படிங்க: புற்றுநோய் சிகிச்சைக்கு முன் கருவுறுதல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது ஏன்?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details