நம்மில் பெரும்பாலானோருக்கு மன அழுத்தம் உள்ளது. சில சமயங்களில் உங்கள் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போன்று உணர வைக்கிறது. ஆனால் மன அழுத்தம் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் வேறுபடும் என்றும் குறைந்த மற்றும் மிதமான மன அழுத்தம் மனநோய் அபாயத்தைக் குறைக்கும் என்றும் ஒருவரது நடத்தைகளில் மாற்றத்தை கொண்டுவரும் என்றும் ஜார்ஜியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறைந்த மற்றும் மிதமான மன அழுத்தம் ஒருவரது தனிப்பட்ட மேம்பாட்டிற்கு பக்கபலமாக உள்ளன. மனச்சோர்வு, விரோத நடத்தை உள்ளிட்ட மனநல கோளாறுகளிலிருந்து காக்கிறது என்கிறார் ஜார்ஜியா பல்கலைக்கழக குடும்பம் மற்றும் நுகர்வோர் அறிவியல் இணை பேராசிரியருமான அசாஃப் ஓஷ்ரி. இதுகுறித்து அவர் கூறுகையில், "நீங்கள் மிதமான மன அழுத்தத்தைக் கொண்டிருக்கும்போது, அதனை சரிசெய்ய உங்களது மூளை எண்ணுக்கிறது. இந்த எண்ணம் ஒருவருடைய திறமையையும், செயல்திறனையும் மேம்பட செய்கிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு வேலைக்கான நேர்காணலுக்கு நீங்கள் தயாராகுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள். இப்போது உங்களுக்கு சிறிதளவு மன அழுத்தம் ஏற்படும். அதேவேளையில் உங்களது திறமையை நீங்கள் மறுபரிசீலனை செய்ய எண்ணுவீர்கள். புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமா. எதை செய்ய தவறிவிட்டோம் என்று சிந்திப்பீர்கள். இப்படிப்பட்ட காரணிகள் உங்களது மூளை செயல்பாட்டில் முன்னேற்றத்தை கொடுக்கும்.
இந்த ஆய்வு 1,200-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் நடத்தப்பட்டது. இவர்களின் மன அழுத்த அளவுகள் குறித்தும், இதனால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் பகுப்பாய்வுகள் செய்யப்பட்டன. இதில் சுவாரஸ்சியமான முடிவுகளை கண்டறிந்தோம். அதாவது, "கடந்த மாதத்தில் எந்த விதமான சம்பவங்களால் நீங்கள் வருத்தப்பட்டீர்கள், எதை உங்களால் சமாளிக்க முடியாமல் போனது என்று கேள்விகளை கேட்டோம்.