தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

தாய்ப்பால் ஊட்டும் விதம் குழந்தைகளின் ஊட்டத்தை மேம்படுத்தும்! - தாய்ப்பால் கொடுக்கும் விதம்]

பிரசவித்தப் பெண்களுக்கு Latching முறையைக் கற்றுக்கொடுத்து அவர்களை பயிற்றுவிப்பதே முறையாக தாய்ப்பால் கொடுக்க உதவும். இப்படித்தான் தாய்ப்பாலூட்டுவதில் திறன்மிகு தாய்மார்கள் உருவாகிறார்கள்.

தாய்ப்பால் ஊட்டும் விதம்
தாய்ப்பால் ஊட்டும் விதம்

By

Published : Sep 3, 2020, 9:55 PM IST

பெரும்பாலான தாய்மார்கள் குழந்தைக்கு முழுமையாக தாய்ப்பால் கிடைக்கவில்லை என ஊட்டச்சத்து பானங்களையும், பால் பவுடர்களையும் கொடுக்க முடிவு செய்துவிடுகிறார்கள்.

பிறந்த குழந்தைகளுக்கு இப்படிச் செய்வது தவறான போக்கு. தாய்மார்களுக்கு குழந்தையின் வாயை மார்பகத்தில் வைப்பதில் சிக்கல் இருக்கலாம்.

பிரசவித்தப் பெண்களுக்கு Latching முறையைக் கற்றுக்கொடுத்து அவர்களை பயிற்றுவிப்பதே முறையாக தாய்ப்பால் கொடுக்க உதவும். இப்படித்தான் தாய்ப்பாலூட்டுவதில் திறன்மிகு தாய்மார்கள் உருவாகிறார்கள். இது குறித்து மகப்பேறு மருத்துவர் ஷாமா ஜெகதீஷ் குல்கர்னியிடம் கேட்டோம்.

தாய்மார்கள் கவனத்திற்கு!

உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ள பரிந்துரைகளை மருத்துவர் ஷாமா விளக்குகிறார்.

  1. குழந்தை பிறந்த முதல் ஐந்து நிமிடங்களிலேயே தாயின் மார்பகத்தின் மீது குழந்தை வாயைப் பதிக்க வேண்டும். இப்படி செய்வதால் குழந்தையை லேட்சிங் (மார்புக்காம்பில் வாய் வைக்கும் முறை) செய்ய வைப்பதில் சிக்கல்கள் உருவாக வாய்ப்பில்லை. குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இது முக்கிய காரணியாக அமைகிறது.
  2. கூடுமானவரை ஒரு மணி நேரத்தில் இதைச் செய்வது அவசியம். இதன் மூலமாக குழந்தை மார்புக் காம்புகளின் மீதுள்ள வாசனையை அறியத் தொடங்குகிறது. மேலும், இந்த கருப்பையில் இருக்கும் ஆம்யோனிடிக் திரவத்தை போன்றது. பிரசவித்திற்கு முன்பாக குழந்தையிருந்த இருள் சூழ்ந்த கருப்பையையும், தாயின் இருதயத் துடிப்பின் சத்தத்தையும் இது உணர வைக்கிறது.
  3. முதல் ஆறுமாதம் கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இந்த ஆறு மாத காலத்தில் குழந்தைக்கு எவ்வித ஆகாரமும் தனியாகக் கொடுக்கத் தேவையில்லை. தாய்ப்பாலை மிஞ்சிய சத்தான ஆகாரங்கள் வேறில்லை.
  4. பிரசவித்த பெண்கள் சுகாதாரமான, ப்ரெஷான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இறுக்கமாக இல்லாமல் திரவம் போலான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையுடன் உரையாடுங்கள்.

முக்கிய காரணிகள்

  • குழந்தை மார்பகத்தில் எப்படி வாயைப் பதித்திருக்கிறது?
  • தாய் பாலூட்டும் போது அமர்ந்திருக்கும் விதம்?
  • குழந்தை தாயை எப்படி பிடித்துள்ளது?

முதலில் குழந்தையின் தலையும் உடலும் ஒரே வாகாக இருப்பது அவசியம். பின்னர் குழந்தை தாயை நோக்கித் திரும்பி படுக்க வேண்டும். அப்போது, குழந்தையின் வயிறு தாயைத் தொடவேண்டும். குழந்தையின் தலையையும், பின்புறத்தையும் தாய் தனது கையால் தாங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது, தாய் வசதியாக அமர்ந்து கொள்ள வேண்டும். மார்பகத்தை ’சி’ நிலையில் (கட்டை விரலுக்கும் மற்ற நான்கு விரலுக்கும் நடுவிலிருக்குமாறு) பிடித்துக் கொள்ள வேண்டும். குழந்தையின் மேல் உதட்டை மார்புக் காம்பில் படுமாறு செய்யும் போது குழந்தை தனது வாயைத் திறந்து பால் அருந்தத் தொடங்குகிறது.

பாலூட்டும் நிலை

குழந்தை வாயை முழுமையாகத் திறக்க வேண்டும். மார்பகத்தின் காம்பைச் சுற்றியுள்ள வளைவான பகுதி (மார்புக் காம்பைச் சுற்றியுள்ள கருப்பான பகுதி) வரையிலும் குழந்தையின் வாய் பதிந்திருக்க வேண்டும். குழந்தையின் கீழ் உதடு வெளியே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தையின் கன்னங்கள் மார்பகத்தைத் தொடவேண்டும்.

பிரசவித்த முதல் இரண்டு நாள் சுரக்கும் தாய்ப்பாலை கொலஸ்ட்ராம் என்பார்கள். இது குறைவாகவே சுரக்கும். இது தான் குழந்தைக்கு முதல் தடுப்பூசி எனலாம்.

சிலர் தாய்க்கு ஓய்வு அளிப்பதாக நினைத்து குழந்தைகளுக்கு பசும் பால், பால் பவுடர் என பிறவற்றைக் கொடுக்கிறார்கள். இவையெல்லாம் தாய்ப்பால் ஆகிவிடமுடியாது. முறையாக குழந்தையை லேட்சிங்கில் ஈடுபடுத்தாவிடில் தாயின் முலைக்காம்பில் பிளவு, வெடிப்பு ஏற்படும். இதனால் குழந்தைகள் பசியோடிருக்க நேரிடும்.

பெரும்பாலும் தாய்ப்பால் கொடுப்பவர்களின் மார்பகத்தில் உள்ள தோல் விரிவடைவதால் மார்பக காம்புகளில் பிளவு, வெடிப்பு உண்டாகும். இந்த நேரங்களில் ஆலோசகரைச் சந்திப்பது அவசியம்.

பாலூட்டுதல் சுழற்சி

குழந்தையை மடியில் எந்த நிலையில் வைப்பது என தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக மகப்பேறு மருத்துவர்களைச் சந்திப்பது இந்தியாவில் இன்னும் பெரும்பாலான அளவில் நடைமுறையில் இல்லை. அதனால் தான் முறையற்ற லேட்சிங் முறைகளால் தாயும் சேயும் சிரமப்பட்டுவருவதாக மருத்துவர் ஷாமா தெரிவிக்கிறார்.

தாய்ப்பால் சுரப்பு போதுமானதாக இருப்பதை எப்படி அறிந்து கொள்ளலாம்?

  • குழந்தை ஒரு நாளைக்கு குறைந்தப்பட்சம் ஆறு முறை சிறுநீர் கழிக்க வேண்டும்.
  • ஒரு மாதத்தில் குழந்தையின் எடை குறைந்தது 500 கிராம் அதிகரிக்கும்.

தாய்ப்பால் கொடுக்கும் போது...

  1. ஒரே படுக்கையில் தாய் தனது குழந்தையை உரிய முன்னெச்சரிக்கையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். தொட்டிலைப் பயன்படுத்த வேண்டாம்.
  2. குழந்தையின் தேவைக்கேற்றார் போல பாலூட்டுங்கள், நேர அடிப்படையில் உணவளிக்காதீர்கள்.
  3. தாய்ப்பால் எளிதில் செரிமானமாவதால் குழந்தை அடிக்கடி பசியை உணர்கிறது. இதனால் குழந்தை அதிகமாக உறிஞ்சும். அதிக பால் கிடைக்கும்.
  4. தாய் தனது வழக்கமான உணவை உட்கொள்ள வேண்டும்
  5. ஒருவேளை பிரசவித்த தாய் அதிகமான துரித உணவுகளையும், காஃபின் கொண்ட பானங்களையும் எடுத்துக் கொண்டால் குழந்தை அதிகமாக அழ நேரிடுகிறது.
  6. தாய் அதிகப்படியான பசும் பாலை எடுத்துக் கொள்ள நேரிடும் போது குழந்தைக்கு வாயுக்கோளாறு ஏற்படுகிறது.
  7. தாய் கரோனா நோயாளியாக இருந்தால் கூட தாய்ப்பால் ஊட்டலாம்.
  8. பிரத்யேக தாய்ப்பால் பாலூட்டுதல் அமினோரியாவைக் கொடுக்கிறது, இதனால் தாய்க்கு மாதவிடாய் ஏற்படாது. இது சிறந்த கருத்தடை ஆகும்.

இதையும் படிங்க:கருவுறாமல் தாய்ப்பால் கொடுப்பது சாத்தியமா? - மகப்பேறு ஆலோசகர் டீனா விளக்கம் (பாகம்-1)

ABOUT THE AUTHOR

...view details