உடலுறவு போதைக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. அதிகப்படியான சிந்தனையும், ஆசையும் அவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச்செல்கிறது. பல இடங்களில் கொடூரமான பாலியல் வன்புணர்வு சம்பவங்களைப் பார்க்கிறோம்.
எப்போதும் உடலுறவு குறித்துச் சிந்தித்துக்கொண்டிருக்கும் அவர்கள், மீண்டும் மீண்டும் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்கிற நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
உடலுறவு போதை மனநோயா?
ஐ.சி.டி. எனப்படும் சர்வதேச நோய்களின் பகுப்பாய்வுப் பட்டியல்தான் (International Classification of Diseases -ICD) உலகளவில் அனைத்து நாடுகளிலும் உள்ள நோய்களையும் வகைப்படுத்துகிறது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை உலக சுகாதார அமைப்பால் இந்த வகைப்படுத்துதல் புதுப்பிக்கப்படும்.
விரைவில் வெளியாகவுள்ள ஐ.சி.டி.யின் 11ஆவது பகுப்பாய்வுப் பட்டியலில் இதுவரை சேர்க்கப்படாத உடலுறவு அடிக்ஷன் எனப்படும் கட்டாய பாலியல் நடவடிக்கையை ஒரு மனநோய் என வகைப்படுத்தி இணைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.சி.டி. 11 கூற்றுப்படி, ஒரு நபர் ஆறு மாதங்களைத் தாண்டியும் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற போதையுடன் வாழ்ந்தால், அவர் மனநோயாளி என அழைக்கப்படுவார். இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்காக மனநல மூத்தமருத்துவர் வீணா கிருஷ்ணனை அணுகினோம்.
ஆபாசப் படங்கள் அதிகமாக பார்த்தல்
அவர் கூறுகையில், "இத்தகைய நபர்கள் ஆபாசப் படங்கள் பார்ப்பதிலும், சுய இன்பம் காண்பதிலும் அடிமையாகி இருப்பார்கள்.