சென்னை:ஆதிமனிதன் முதன் முதலில் பழகிய விலங்கு நாய் தான். இவையே மனிதனின் சிறந்த நண்பன் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவற்றை மனிதர்கள் செல்லப்பிராணியாக வளர்ப்பதன் மூலம் உரிமையாளர்கள் சுறுசுறுப்பாகவும், மன அழுத்தம் இல்லாமலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள், நாய் வளர்ப்பதால் டிமென்ஷியா அல்லது வயது முதிர்வால் ஏற்படும் ஞாபக மறதி ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாமா என்ற ஆய்வில் இறங்கினர். உலகில் 55 மில்லியன் மக்கள் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதைக் கருத்தில் கொண்ட டோக்கியோ பெருநகர முதுமையியல் தொழில்நுட்ப நிறுவனம், 12 ஆயிரம் நபர்களிடம் ஆய்வு நடத்தியது.
ஆய்வின் முடிவில், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள் நாய்களை வளர்ப்பதன் மூலம் டிமென்ஷியா ஏற்படும் அபாயத்தை 40 சதவீதம் குறைக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து, மருத்துவ உளவியலாளர் மெஹெசாபின் டோர்டி கூறுகையில், "நாய்களுடனான தொடர்பு மன அழுத்தத்தைக் குறைக்கும். நாய்களுடனான நட்பு உடலைச் சுறுசுறுப்பாக்கும், சமூக தொடர்புகளை மேம்படுத்தும் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கும்.