குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் காலநிலை மாற்றம், பருவக் காய்ச்சலுக்கு வழி வகுக்கலாம். கொஞ்சம் உடல் வலி, ஜலதோஷம், சோர்வு என அதன் அறிகுறிகள் ஏற்பட்டவுடன் பலரும் பெரும்பாலும் மருத்துவமனைகளுக்கு படையெடுக்கின்றனர்.
ஆனால், எல்லா நோய்களுக்கும் ஆங்கிய மருந்துகளும், மாத்திரைகளும் மட்டும் தீர்வல்ல. பக்க விளைவுகளை ஏற்படுத்தாத சில வீட்டு மருத்துவக் குறிப்புகளும் உள்ளன. இவை காய்ச்சலைக் குறைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். பருவக் காய்ச்சலையும் குறைக்கும். அந்த வகையில் மருத்துவ குணம் மிகுந்த நான்கு வீட்டு உபயோகப் பொருள்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
1. இஞ்சி
இந்தியர்களின் சமையலறைகளில் இஞ்சிக்கு தவிர்க்க முடியாத இடமுண்டு. இந்த இஞ்சி சமையலுக்கு ருசியைக் கூட்டுவதோடு நமது உடலில் ஏற்படும் பல தொற்றுகளை எதிர்க்கும் சக்தியையும் பெருக்குகிறது.
- இஞ்சி சாறு
இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் தண்ணீர் கலப்பதே இஞ்சி சாறு. இந்தச் சாறில் கொஞ்சம் எலுமிச்சை சாறையும் சேர்த்தால் வீரியம் இன்னும் அதிகமாகயிருக்கும். இதைக் குடித்தால் காய்ச்சல் பறந்து போகும்.
2. பூண்டு
பூண்டு இடம்பெறாத அசைவ உணவுகளே இல்லை எனச் சொல்லுமளவுக்கு இஞ்சியைப் போலவே பூண்டும் சமையலறையின் அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாக உள்ளது. இதில் வைரஸ், பாக்டீரியா எதிர்ப்பு சக்தி அடங்கியுள்ளதால், பருவக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகிறது.
- பூண்டு சாறு
சூடான நீரில் அரைத்த பூண்டு பற்களைப் போட்டு (தேவைக்கேற்ப) 10 நிமிடம் கழித்து குடிக்க காய்ச்சல் குறையும். பூண்டிலிருக்கும் டயால் சல்பைடு உடல்சூட்டைக் குறைக்க உதவுகிறது.