சென்னை: உமி நீக்கிய கோதுமையில் இருந்து பெறப்படும் வெள்ளை ரவையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க, ரத்த அழுத்தத்தைச் சீர் செய்ய, இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான என பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது வெள்ளை ரவை.
உடல் எடை குறைக்க எவ்வாறு உதவும் வெள்ளை ரவை; உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு வெள்ளை ரவை சிறந்த தீர்வாக அமையும். இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உங்கள் எடையைக் கட்டுப்படுத்தும். மேலும் வெள்ளை ரவை பசியைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் பசியைத் தூண்டாமல் இருப்பதால் அதீத எடை உள்ளவர்கள், அடிக்கடி பசி எடுத்துக்கொண்டே இருக்கிறது என்ற பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளை ரவையை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் வெள்ளை ரவையில் கொழுப்புச் சத்தின் அளவு பூஜ்ஜியமாக இருப்பதால் உடல் எடையை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது வெள்ளை ரவை; சர்க்கரை நோயாளிகள் தங்கள் வாழ்கையில் ருசியான உணவுகளை உட்கொள்ள முடியாமல் தவிப்பார்கள். அவர்களுக்கு வெள்ளை ரவையாலான உணவுகளைத் தயாரித்துக்கொடுங்கள். சுவையும், ஆரோக்கியமும் அவர்களைச் சென்றடையும். வெள்ளை ரவை உட்கொள்ளும்போது அது உணவைச் சர்க்கரையாக மாற்றும் திறனைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் உடல் தனது வேலையைச் சரியான ஆற்றலுடன் செய்ய உதவுகிறது. இரத்தத்தைச் சுத்திகரித்து ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாக்கிறது. இதனால் உங்கள் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வெள்ளை ரவை; வெள்ளை ரவையை உட்கொள்வதன் மூலம் உங்கள் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். உடல் தனது வேலையைச் செய்யச் சீரான ஆற்றலை வெள்ளை ரவை வழங்குவதால் ரத்த ஒட்டமும் உடலில் சீராக நடைபெறும். ரவையில் மெக்னீசியம் நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.