ஹைதராபாத்:பயணம் என்றாலே எல்லாருக்கும் அலாதி பிரியம். அதிலும் ரயில் பயணம் என்றால் எல்லாருக்கும் குஷி தான். ஏனெனில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை என அனைவருக்கும் ஏற்றது. மேலும் குறைவான கட்டணம். ஆகையால் ரயில் பயணத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த விருப்பமான பயணத்தில், பலரும் விரும்பாததது உணவை தான்.
இந்த ரயில் பயணத்தின் போது, அவ்விடத்தில் கிடைக்கக்கூடிய உணவையே சாப்பிட நேரிடும். அதாவது நாம் நினைக்கும் அல்லது விரும்பும் உணவை சாப்பிட முடியாது. ஆனால் இனிமேல் அந்த கவலை தேவை இல்லை. நாம் அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ் அப் மூலம், நமக்கு விருப்பமான உணவை, பிரபலமான உணவகங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்லைன் ரயில் உணவு விநியோகத்தில் முன்னணியில் உள்ள RAILOFY நிறுவனம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் எந்த ஒரு புதிய ஆப்பையும் பதிவிறக்கம் செய்யாமல், ஹல்டிராம்ஸ் (Haldirams), சப்வே (Subway), பிகர்னெர்வாலா (Bikarnerwala), ஆர்ய பவன் (Arya Bhavan), ஹாட்பிளேட் எக்ஸ்பிரஸ் (Hotplate Express) போன்ற பிரபலமான உணவகங்களில் இருந்து உணவை நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் சாட்போட் (Whatsapp Chatbot) மூலம் ஆர்டர் செய்யலாம்.
ரயிலோஃபியின் வாட்ஸ் அப் சேட்போட்டிற்கு (RAILOFY’s WhatsApp Chatbot) சேட் செய்வது போல் செய்தி அனுப்பி, உங்களுக்கு பிடித்த விதவிதமான உணவுகளை, உங்களுக்கு விருப்பமான உணவகங்களில் ஆர்டர் செய்யலாம். இதன் மூலம் உங்கள் ஆர்டரின் நிலை, அதாவது உங்கள் ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதா?, உணவு தயாராகிக் கொண்டிருக்கிறதா? என்பது முதல் டெலிவரி வரை நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் ஆர்டருக்கு பணம் செலுத்துவதிலும் பல பயன்பாடுகள் உள்ளன. குறிப்பாக உணவு டெலிவரி செய்யப்பட்ட பின்னர் கூட பணத்தை செலுத்தலாம். மேலும் மொபைல் நெட்வோர்க் பற்றி கவலை கொள்ள தேவையில்லை.