சென்னை:விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் ரேபிஸ் வைரஸ் தொற்று பல நூற்றாண்டுகளாக மனிதக் குலத்தை அச்சுறுத்தி வருகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில்தான் இந்த வைரஸ் தாக்குதல் அதிகம் இருப்பதாகவும், நாய்களில் இருந்துதான் அதிக அளவு மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் பேர் ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழக்கும் நிலையில், அதில் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 40 சதவீதம் பேர் எனவும் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி, வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடம் அணுகுவது எவ்வாறு, அதற்கான தடுப்பூசிகள் உள்ளிட்டவை குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
ரேபிஸ் விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தல்கள்; ரேபிஸ் வைரஸ் குறித்து பொதுமக்கள் அனைவரும் அடிப்படை புரிதலோடு இருக்க வேண்டும். நாய் உள்ளிட்டு வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் போடப்படுவதைத் தனிப்பட்ட முறையில் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.
அது மட்டும் இன்றி, ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாயால் நீங்கள் கடிபடவோ, பிறாண்டப்படவோ அல்லது அதன் நாக்கால் உங்கள் சருமத்தில் நக்கினாலும் ரேபிஸ் வைரஸ் உங்களையும் பாதிக்கும். இதனால் கால தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த கொடிய நோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள இது அடிப்படை விழிப்புணர்வாகவே உள்ளது.
போஸ்ட் எக்ஸ்போஷர் ப்ரோபிலாக்ஸிஸ் (PEP);PEP என்ற இந்த ரேபிஸ் தடுப்பூசி ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) என்ற சந்தேகத்திற்குரிய ரேபிஸ் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும். இதை நீங்கள் சரியான நேரத்தில் போட்டுக்கொள்வது, PEP உடன் தொடர்புடைய விஷயங்கள் குறித்துத் தெளிவு பெறுவதன் மூலம் ரேபிஸ் இறப்புகளை 100 சதவீதம் தடுக்க முடியும் என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மாஸ் டாக் தடுப்பூசி (Mass Dog Vaccination);99 சதவீதம் மனிதர்கள் ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்படுவதற்கு நாய்கள் தான் காரணமாக இருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த நாய்களுக்குப்போடப்படும் தடுப்பூசிதான் மாஸ் டாக் தடுப்பூசி. இதை வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்குப் போடுவதன் மூலம் ரேபிஸ் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம்.
சுகாதார ரீதியான ஒத்துழைப்பு;ரேபிஸ் குறித்து விழிப்புணர்வு பெறுவதற்கும், நாய்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கும் பொதுமக்கள் மற்றும் சுகாதார அமைப்புகள் இடையே சிறந்த ஒத்துழைப்பு இருக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அளவிலும் கிராமங்கள் உள்ளடக்கிய அனைத்து இடங்களிலும் ரேபிஸ் தடுப்பு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நாய்களின் நடத்தை குறித்துப் புரிந்துகொள்ள வேண்டும்; மனிதர்களுக்கு விசுவாசமாக இருக்கும் நாய் திடீரென மனிதர்களைக் கடிக்கலாம். ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாயின் உமிழ் நீர், காயங்கள் உள்ளிட்டவைகள் மூலம் ரேபிஸ் மேலும் பரவுகிறது.
இதையும் படிங்க:ப்ரீசர் அறைக்குள் சிக்கிக்கொண்ட நபர்: -18 டிகிரி செல்சியஸ் குளிரில் போராடிய நொடிகள்.!