லண்டன்: உலகம் முழுவதும் கரோனா ஊரடங்கு பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள், வொர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரங்கள் அதிகரித்துவிட்டன. இந்த புதிய கலாச்சாரங்கள் பேரிடர் காலத்தில் சாதகமாக தெரிந்தாலும், நாளடைவில் பெரும் பாதகமாக மாறிவிட்டன. ஆன்லைன் வகுப்புகளால் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுவதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்தன. அதேபோல வொர்க் ஃப்ரம் ஹோம் காரணமாக தூக்கமின்மை, பசியின்மை உள்ளிட்ட உடல்நல கோளாறுகள் முதல் மன அழுத்தம், மன சோர்வு உள்ளிட்ட மனநலக்கோளாறுகள் வரை ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இப்போது ஆபாச அடிமைத்தனமும் வொர்க் ஃப்ரம் ஹோம் காரணமாக அதிகரித்துவிட்டது என்று இங்கிலாந்து நாட்டின் பாலியல் வல்லூநர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாலியல் மருத்துவர் பாவ்லா ஹால் (செக்ஸ் மற்றும் ஆபாச அடிமைத்தன கட்டுப்பாட்டு மையம், லண்டன்) கூறுகையில், "ஆபாச வீடியோக்கள் பார்ப்பது என்பது பொதுவான ஒன்று என்றாலும் தொடர்ந்து பார்க்கும் பழக்கம் நாளடைவில் ஆபாச அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கிறது.
இங்கிலாந்து நாட்டில் கரோனா ஊரடங்கிற்கு பின் ஆபாச அடிமைத்தனம் இருமடங்காக அதிகரித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 1 அல்லது 2 முறை ஆபாச வீடியோக்கள் பார்த்துவந்த நபர்கள் ஊரடங்கிற்கு பின்பு 5 அல்லது 6 முறை பார்த்துவருகின்றனர். இந்த எண்ணிக்கை வொர்க் ஃப்ரம் ஹோம் பார்க்கும் நபர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது. எங்களிடம் சிகிச்சைக்கு வரும் ஆபாச அடிமைத்தனநோயாளிகளில் 70 விழுக்காட்டினர் வொர்க் ஃப்ரம் ஹோம் பார்க்கும் நபர்களாகவே இருக்கின்றனர். இதில் பெண்களும் உள்ளனர். குறிப்பாகஒரு நாளைக்கு 14 மணிநேரம் ஆபாச படம் பார்க்கும் நிலைக்கும் பலர் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு சிகிச்சைகளை அளித்துவருகிறோம்.
கடந்த 6 மாதங்களில் மட்டும் 750 பேர் எங்களால் ஆபாச படங்கள் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை என்று சிகிச்சைக்கு வந்துள்ளனர். இந்த ஆபாச அடிமைத்தனம் போதைப்பழக்கம் போலல்லாமல் நடத்தையில் சீரழிவை ஏற்படுத்துவதால் நோயாளிகள் மிகுந்த மன உளைச்சளுகும் உள்ளாகின்றனர். இதுபோன்ற அடிமைத்தனம் ஏற்பட்டால் உடனடியாக பாலியல் அல்லது உளவியல் மருத்துவர்களை அணுகவேண்டும். வாரத்திற்கு 10 தடவைக்கும் அதிகமாக வீடியோக்கள் பார்க்கும் பழக்கம் இருந்தால் மனரீதியான கட்டுப்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:ஆன்மிக செக்ஸ் தெரியுமா? ... புத்தம் புது அனுபவம் தரும் கரீஸா செக்ஸ்..