சைவ உணவுகளை உட்கொள்வது, ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களின் நல்ல ஆதாரமாகும். தாவரம் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம், நம் உடலில் நோய்க்கிருமிகள் பரவாமலும், பூச்சிகள் வளராமலும், நம்மை பாதுகாக்க உதவும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டசத்துகளை அதிகரிக்கும்.
அத்தகைய உணவுகளை, நாம், தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது நாம் தினசரி நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய நான்கு தாவர உணவுகள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
முக்கியமான தாவரம் சார்ந்த 4 உணவுகள்!
மே மாதம் 2021இல், சுமார் 25 ஆண்டுகளாக தாவர உணவுகள் உட்கொண்டு சிறப்பாக வாழும் 5 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட, 12 ஆய்வுகள் அடங்கிய ஆராய்சி முடிவுகள் வெளியாகின.
அதில் தாவர உணவுகள் அதிகம் உட்கொண்டவர்களின் ஆயுட்காலம் நீண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவை குறைந்த அளவு சாப்பிட்டவர்களுடன் ஒப்பிடுகையில் ஐந்து முதல் 25 ஆண்டுகள் மாறுபடும்.
இந்த ஆராய்ச்சி, நாம் தினசரி சேர்க்க வேண்டிய நான்கு தாவரம் சார்ந்த உணவுகள் (தக்காளி, பூசணிக்காய், காளான், ஓட்ஸ்), மற்றும் அதன் நன்மைகள் குறித்து காண்பிக்கிறது.
தக்காளி:
தக்காளி என்பது காய்கறி வகை அல்ல. அது ஒரு பெர்ரி பழம். இவை வைட்டமின் சி மற்றும் லைகோபின் (கரோடினாய்ட்) நிறைந்துள்ளன. கரோட்டினாய்டுகள் தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் நிறமிகள் ஆகும், அவை காய்கறிகளுக்கு அவற்றின் பிரகாசமான நிறத்தை அளிக்கின்றன.
1-1.5 பெரிய தக்காளி அல்லது 1-1.5 கப் தக்காளி சாறுக்கு சமமான தக்காளிப் பொருள்களை ஆறு வாரங்களுக்கு தினமும் உட்கொள்ளுமாறு, ஆராய்ச்சியில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில், ஆறு ஆய்வுகளின் மதிப்பாய்வு கூறுகிறது.
தக்காளி உட்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில், அதை எடுத்துக்கொண்டவர்களின் ரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகளின் (இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் உங்கள் இரத்தத்தில் உள்ள ஒரு வகை கொழுப்பு) அளவைக் குறைத்து, மொத்த மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் தக்காளி உட்கொள்பவர்களுக்கு நல்ல கொழுப்ப்பின் அளவு அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மற்றொரு 11 ஆய்வுகளின் மதிப்பாய்வு, ரத்த அழுத்தத்தில் தக்காளி மற்றும் லைகோபீனின் ஆற்றலை சோதித்தது. அதில், தக்காளி உட்கொள்பவர்களுக்கு சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (இதயம் செயல்படும் போது வெளியேற்றப்படும் முதல் ரத்ததின் அழுத்தம்), பெரிய அளவில் குறைவதற்கு வழிவகுப்பதாகவும், டயஸ்டாலிக் அழுத்தத்தில் (இதயம் ஓய்வெடுக்கும் போது வெளியேற்றப்படும் இரண்டாவது ரத்த அழுத்தம்) எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், தக்காளி சாப்பிட்ட சில நாள்களுக்கு பிறகு ஆய்வு செய்த போது, அவர்களின் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் இரண்டும் குறைந்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து ஆய்வின் மற்றொரு மதிப்பாய்வு, மொத்தம் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் ஆண்களைக் கொண்டு நடத்திய ஆய்வில், சமைத்த தக்காளி, தக்காளி சாஸ்கள் மற்றும் தக்காளி சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் 15 முதல் 20 சதவீதம் குறைவாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
செய்முறை குறிப்புகள்:
தக்காளி மற்றும் சிவப்பு கேப்சிகத்தை ஆலிவ் எண்ணெய் மற்றும் வினிகருடன் வறுத்து, சாஸை உருவாக்கவும். பின்னர் ஒரு ஸ்பூன் மிளகாய் பேஸ்ட் அல்லது உங்களுக்கு விருப்பமான மூலிகைகள் கொண்டு ப்யூரி செய்யவும். பின்னர் அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து உபயோகம் செய்யவும்.
பூசணிக்காய்:
பூசணியில் பீட்டா - கரோட்டின் நிறைந்துள்ளது. இது ஒரு கரோட்டினாய்டு (தாவர நிறமி) ஆகும். இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு, தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் எதிர்புசக்தியை அதிகரிக்கும். கண்கள், தோல், நுரையீரல் மற்றும் குடலில் உள்ள செல்களின் ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் இது பயன்படுகிறது.