இமயமலை உப்பு என்பது ஒரு வித இந்துப்பாகும். இது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாவட்டத்தில் காணப்படும். இமயமலை அடிவாரத்தில் காணப்படும் இந்த உப்பு, பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் தன்னுள் கொண்டுள்ளதாகும்.
நமக்கு கிடைக்கும் உப்புகளிலேயே தூய்மையான உப்பு இந்த இமயமலை உப்பு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குளியலுக்குப் பயன்படுத்தப்படும் உப்பு, உப்பு விளக்கு, சமையல் உப்பு என இந்த உப்புக்குப் பல்வேறு வடிவங்கள் உள்ளன. இந்த உப்பின் பயன்கள் குறித்து அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.
உடலின் நச்சுத்தன்மையை அகற்றும்
பொட்டாசியம், இரும்பு, கால்சியம் எனப் பல்வேறு தாதுக்கள் இந்த உப்பில் அதிகளவு காணப்படுகின்றன. இந்தத் தாதுக்கள் உடம்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது.