2020ஆம் ஆண்டு பல புதிய நினைவுகளை, அனுபவங்களைத் தந்துள்ளது என்றால் மிகையல்ல. அப்படி 2020ஆம் ஆண்டு பல ஆண்டுகள் கழித்தாலும் நம் மனத்தில் நிற்கும். அப்படி, பலவற்றை நமக்குத் தந்த இந்த 2020இல் மன அழுத்தம் இரட்டிப்பாகியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் உள்ள ஐந்தில் ஒரு இந்தியருக்கு ஏதோ ஒரு மனப்பிரச்சினை இருந்துள்ளது. அதில் கரோனா பரவல், ஊரடங்கு காரணமாக பல வகைகளில் மக்களுக்கு மன பிரச்சினை எழுந்துள்ளதாக ஈடிவி பாரத்தின் சுகிபவ (உடல்நலம்) குழு கண்டறிந்துள்ளது.
இது குறித்து மதிப்பாய்வு செய்த நமது ஈடிவி பாரத் குழுவின் தகவல்படி, பல்வேறு பிரச்சினைகளால் மனநோய் இரட்டிப்பாகியுள்ளது தெரியவந்தது.
மனநோய்க்கான காரணம் ஒவ்வொரு ஆண்டும் வேறுபடுகின்றது. அப்படி இந்தாண்டு (2020) மனநலத்தை பாதித்த சில காரணங்களாக கரோனா வைரஸ் பரவல், ஊரடங்கு, வேலையின்மை, நிதி நெருக்கடி, எதிர்காலத்தை குறித்தான பயம் போன்றவை அடங்கும். இது தவிர, திருமண முரண்பாடு, வீட்டு வன்முறை வழக்குகளும் பதிவாகியுள்ளன.
மன அழுத்தம், சோர்வு எழுச்சியடைய காரணம் என்ன?
- இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, கரோனா பரவ தொடங்கியது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருந்தபோதிலும், கரோனா பரவல் காரணமாகவும், வேலையின்மை காரணமாகவும் சுகாதாரம், பொருளாதார நிலைமைகள் குறித்து மக்களிடையே கவலை எழுந்தது. அதுமட்டுமின்றி ஊரடங்கள் மக்கள் வீட்டிற்குள் முடங்கியதால், மக்கள் சிறையில் சிக்கியிருப்பதைப் போல உணரத் தொடங்கிவிட்டனர்.
- குறிப்பாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, கரோனா நோயாளிகளில் சுமார் 30% பேர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டனர். இது தவிர, வீட்டிலேயே இருக்க நேரிட்டதால், உறவுகளுக்கிடையே பரஸ்பரம் குறைந்து, மோதல்கள் ஏற்பட்டன. இதனால் மன அழுத்தம், சோர்வு அதிகமாகியது.
- இதில், ஆச்சரியம் என்னவென்றால், பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டனர். பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடந்ததால் மாணாக்கர் பல பிரச்சினைகளைக் கையாண்டனர். இதற்காக பல மாநில அரசுகள் சில ஆலோசனைகளை மாணாக்கருக்கு வழங்கியது.
தற்கொலை கள் அதிகரிப்பு