தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

காற்று மாசுவினால் புற்று நோய்: ஆபத்து நுரையீரலுக்கு மட்டும் அல்ல.! - ஆய்வாளர்கள்

நுண்ணிய துகள்கள் நிறைந்த காற்று மாசுபாடு, நுரையீரல் புற்று நோய்களை கடந்து வேறு பல புற்று நோய்களுக்கும் வழிவகை செய்யும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 12, 2023, 7:01 PM IST

நியூயார்க்: நுண்ணிய துகள்கள் நிறைந்த காற்று மாசுபாடு, நுரையீரல் புற்று நோய்களை மட்டும் அல்ல வேறுபல புற்று நோய்களையும் ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காற்று மண்டலத்தில் கலந்திருக்கும் நுண்ணிய துகள்கள் PM2.5 என்ற வகையில் அளவிடப்படுகிறது. இந்த துகள்கள் மனிதனின் சுவாசக் குழாய் வழியாகப் பயணித்து நுரையீரலைச் சென்றடைந்து சுவாசக்கோளாறு, கண் மற்றும் தொண்டையில் எரிச்சல் உள்ளிட்ட பல உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகை செய்கிறது.

அது மட்டுமின்றி சிலருக்குக் காலப்போக்கில் புற்று நோய் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. ஆனால் தற்போது நுரையீரல் புற்று நோய் மட்டும் அல்லாத வேறு பல புற்று நோய்களுக்கும் இந்த நுண்ணிய துகள்கள் நிறைந்த காற்று மாசுபாடு வழிவகை செய்யும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சார்பில் PM2.5-வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வு தொடர்பான கட்டுரை ஒன்று, சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் மற்றும் சுற்றுச்சூழல் தொற்றுநோய்கள் தொடர்பான இதழில் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:மாரடைப்பு யாருக்கெல்லாம் வரும்.? ட்ரோபோனின் ரத்த பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

அதில், கடந்த 10 வருடங்களில் PM2.5 மற்றும் NO2 ஆகியவற்றின் தாக்கத்தால் மக்கள் மத்தியில் பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்கள் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்பக மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்களுக்கு இந்த காற்று மாசுபாடு வழிவகை செய்யும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அது மட்டும் இன்றி, குறிப்பிடத்தக்க சில புற்று நோய்களின் வளர்ச்சியில் முக்கியமான ஆபத்து காரணியாக நுண்ணிய துகள்கள் நிறைந்த காற்று மாசுபாடு இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனித ஆரோக்கியத்தில் காற்று மாசுவின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆய்வாளர் யாகுவாங் வெய் கூறியுள்ளார்.

பொதுவாகக் காற்று மாசுபாடு நுரையீரல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தினாலும், அதனுடன் பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய், மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்டவை தொடர்பில் இருப்பதாக நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) பெண்களுக்கான மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்களுடன் அதீத தொடர்பு கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புற்று நோய்களுக்கு 65 வயதுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகம் பதிக்கப்படுவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இதயத்திலும் பிளாஸ்டிக் துகள் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

ABOUT THE AUTHOR

...view details