கரோனா தொற்றின் காரணமாக அமலுக்கு வந்த ஊரடங்கால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக குழந்தைகள் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது, செல்போனில் ஆன்லைன் கேம்ஸ், டிவி பார்ப்பது, நீண்ட நேரம் உறங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாள் முழுவதும் வீட்டிலேயே உள்ளதால், இத்தகைய செயலை மீண்டும் மீண்டும் செய்கையில் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இது சாதாரணம் தான் என பெற்றோர் நினைத்தாலும், நாளடைவில் குழந்தைகளால் சிறிய வேலைகளை கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். உடல் பருமன் பிரச்னை பெரியவர்களுக்குதான் பாதிப்பு ஏற்படுத்தும் என்று எண்ணாமல், சிறு வயதிலே உடல் பருமனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்காக குழந்தை மருத்துவரான டாக்டர் சோனாலி நவலே பூரண்டரிவை அணுகினோம்.
உடல் பருமன் பிரச்னைகள்
ஆரோக்கியமற்ற உணவு முறை, வாழ்க்கை முறை காரணமாக எந்த வயதினரும் உடல் பருமன் பிரச்னையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. சில நேரங்களில் மரபியல் அல்லது ஹார்மோன் பிரச்னைகளாகவும் இருக்கக்கூடும். குழந்தைகளின் எடை அதிகரிப்பது சோர்வு, தூக்கமின்மை, பதற்றம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. இது தவிர, சிலருக்கு சுவாசிப்பதில் சிரமமும் ஏற்படலாம். உடல் பருமன் அதிகரிப்பு சில சமயங்களில் நீரிழிவு நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பெரிய பிரச்னைகளை சந்திக்கவும் வழிவகுக்கும்.
உடல் பருமன் காரணங்கள்:
அன்றாட வாழ்க்கை முறை சரியில்லாதது