தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது ஒரு கோளாறு ஆகும், இதனால் நீங்கள் தூங்கும்போது சுவாசப் பாதைகளில் தடை ஏற்படுகின்றது அல்லது மூக்கு அடைத்துவிடுகிறது, சில சமயங்களில் குறட்டைகள் ஏற்படும்.
சத்தமில்லாத தூக்கம் அதன் அறிகுறியாகும், இதனால் பாதிக்கப்படும் நபர் அவரது உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்நபர் உடல் நிறை குறியீட்டெண்ணை (BMI) சிறந்த அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஹைதராபாத்தில் உள்ள வி.ஐ.என்.என். மருத்துவமனையின் ஆலோசனை மருத்துவர் ராஜேஷ் வுக்கலாவிடம், இந்த விஷயம் குறித்து நாம் கேட்டோம், அதற்கு அவர், "நாம் சுவாசிக்கும்போதும், காற்றை வெளிவிடும்போதும் ஆக்சிஜன் (O2), கார்பன் டை ஆக்சைடு (CO2) ஆகியவற்றின் அளவு பொருந்தி இருக்க வேண்டும்.
ஆனால் தூக்கத்தில் மூச்சுத் திணறலின்போது, சைனஸ், மூக்கு, கழுத்துப் பகுதிகளில் பொருந்தி இருக்காது.
இதன் அறிகுறிகள் என்ன?
- குறட்டையின் அளவு அதிகரித்தல்
- ஓய்வே இல்லாததுபோல சோர்வாக இருத்தல்
- லேசான தலைவலி
- கவனக்குறைவு
- நாள்பட்ட சோர்வு
- அன்றாடச் செயல்பாடுகளைச் செய்ய இயலாமை
- மூச்சுத் திணறல் அல்லது திடீர் விழிப்பு
- சுவாசிக்க அதிகக் காற்றை உள்ளிழுக்க சிரமம்
- அழுத்தம்
இதில் பெரும்பாலானவர்கள் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கீல்வாதம், ஹைப்போ தைராய்டிசம் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகளை உருவாக்கும் ஆபத்தில் உள்ளனர்.
மிக மோசமான சூழல் என்னவென்றால், உடலில் உள்ள ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றின் பொருந்தாத தன்மை காரணமாக, முக்கிய உறுப்புகள், மூளை, இருதயம், நுரையீரல்கள் பாதிக்கப்படலாம்" என எச்சரிக்கிறார்.
ஆபத்துக் காரணிகள்
- உடல் பருமன்
- பெரிய கழுத்து (17 அங்குலத்திற்கு மேல்)
- உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 25-க்கு மேல் இருத்தல்
- சுவாசிப்பதில் மிகச் சிரமமாக உணருதல் (Deviated Nasal Septum)
- ஒவ்வாமை
- சைனசிடிஸ் (Sinusitis)
- ஆஸ்துமா