தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

சிறப்பு குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள்! - சிறுதானியங்கள்

குழந்தை நல மருத்துவர்களை அணுகும் பல பெற்றோர், என் குழந்தை எப்போதும் முதலிடம் பெறுவதற்கு சிறப்பு ஊட்டச்சத்து டானிக் இருந்தால் தாருங்கள் என்று கேட்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். தேர்வு, பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டி, அலங்கார உடை போட்டி என பள்ளிகளில் எந்த போட்டி வந்தாலும், பெற்றோர்கள் உடனடியாக மூளை வளர்ச்சிக்கான டானிக்கைத் தேடுகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள பாலுட்டும் தாய்மார்கள், குழந்தைகள் நல மருத்துவர் ஷாமா ஜெகதீஷ் குல்கர்ணியுடன் ஈடிவி பாரத் சுகிபவா குழுவினர் உரையாடினார்.

ஊட்டச்சத்து உணவுகள்
ஊட்டச்சத்து உணவுகள்

By

Published : Jul 3, 2021, 10:25 PM IST

சிறப்பு குழந்தைகள் என்பவர்கள் யார்?

எந்த ஒரு குழந்தை அதிகமான அளவு பொது மனத் திறன், குறிப்பிட்ட செயல் அல்லது அறிவு ஆகியவற்றில் அசாதாரண திறன் கொண்ட குழந்தைகள் சிறப்பு குழந்தைகள் எனப்படுகின்றனர்.

அந்த குழந்தைகளுக்கு அதிகம் கிரகிக்கும் திறன் இருக்கும். அவர்கள் தங்களின் சகாக்களைக் காட்டிலும் விரைவாக கற்றுக் கொள்கிறார்கள்.

அவர்களுக்கு அதிகமான அறிவுத்திறன் இருக்கிறது. அவை ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட விஷயங்களில் அதிகளவில் செயல்படுகிறது.

புத்திசாலித்தனமான குழந்தை:

தன்னியல்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ள குழந்தைகளை சிறப்பு குழந்தைகள் என அழைக்க முடியுமா? ஆட்டிஸம் (ஏஎஸ்டி) பாதிப்புள்ள குழந்தைகளுக்குப் பரந்த அளவில் 'ஐக்யூ' இருக்கும்.

அவர்கள் அதிக புத்திசாலிகளாக இருக்க முடியும் அல்லது குறைவான ஐக்யூவைக் கொண்டிருக்கலாம். ஒரு குழந்தை சிறப்பு குழந்தையா இல்லையா என்பதை ஐக்யூ கொண்டு எப்படி தீர்மானிக்க முடியும்.

ஐக்யூ சோதனைகளின் மூலம்

80 - 100 - இயல்பானவர்கள்

100 - 120 - இயல்புக்கு மேல் உள்ளவர்கள்

120 - 140 - புத்திசாலிகள்

104க்கு மேல் அதிபுத்திசாலிகள் எனக் கணக்கிடப்படுகிறது.

சிறப்பு குழந்தை கல்விச் செயல்பாட்டிற்காக எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?

சிறப்பு குழந்தைகள் பெரும்பாலான நேரங்களில் வேகமாக தங்களின் வகுப்பறை செயல்பாடுகளை முடித்து விடுகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் குறும்புடன் நடந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்.

அந்த குழந்தையின் வகுப்பு ஆசிரியர் பயிற்சி பெற்றவராக, குறிப்பிட்ட அந்த குழந்தை புத்திசாலி என்பதை அறியாதவராக இருந்தால், குறும்பிற்காக அக்குழந்தையைத் தண்டிக்கத் தொடங்குகிறார். அந்த குழந்தை குறிப்பிட்ட ஒரு விசயத்தில் புத்திசாலியாகவும், மற்ற விசயங்களில் பின்தங்கி இருக்கலாம், இதை அறியாத ஆசிரியர் வழங்கும் தண்டனை குழந்தையின் செயல்பாட்டை பாதித்துவிடும்.

அந்த குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் தேவையா?

அதிக உணச்சி வசப்படக்கூடிய இக்குழந்தைகள், அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவு தேவை. பெற்றோர் அவர்களின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தவறான பிம்பம், வளங்களை பயன்படுத்துவதில் தடைகள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம்.

சிறப்பு குழந்தைகளுடன் பழகும் பெற்றோர், ஆசிரியர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம்?

மனத்திறனை அதிகரிக்கச் செய்யும் டானிக், வைட்டமின் மாத்திரைகளுக்காகப் பெற்றோர் எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

'டானிக்குகளை விட ஊட்டச்சத்து உணவே இன்றியமையாதது' என்கிறார் மருத்துவர் ஷாமா. இதுகுறித்த முக்கியமான கருத்துகளை அவர் தெரிவிக்கிறார்.

ஒரு குழந்தை உருவாகும் முதல் 1000 ஆவது நாள்களில் மூளை உருவாகிறது. அதாவது நரம்புகள் வளர்ச்சி பெற்று இணைப்புகள் ஏற்பட்டு மூளை வளர்ச்சி பெறுகிறது.

கர்ப்பகாலத்தின் முதல் 280 நாள்கள் தாய் உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியமானவை. அதே போல, முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்யேகமாகத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். வேறு எந்த உணவும் கொடுக்கக்கூடாது. ஆறு மாதங்களுக்குப் பின்னர் வீட்டில் தயாரிக்கப்பட்ட மென்மையான உணவுகளை கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் குழந்தைகளின் ஐக்யூ-வை அதிகரிக்கச் செய்கிறது. அதனால் முதல் மூன்று ஆண்டுகள், குழந்தை சிறந்த அறிவுத்திறன் பெறும் காலம் என்பதால், அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு அன்பைப் போதித்தால், அவர்கள் அன்பையும், வெறுப்பை போதித்தால் வெறுப்பையும் கற்றுக்கொள்கிறார்கள்.

எதுவும் கற்றுக்கொடுக்கவில்லை என்றால் குழந்தை வெறும் பொம்மை போலவே வளரும். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் குழந்தைக்கு என்ன கற்றுக் கொடுக்கிறீர்கள் என்பது முக்கியமானது.

நீங்கள் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்கிறீர்கள், என்ன விசயங்ளை கற்றுக்கொடுக்கிறீர்கள், என்ன பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்கிறீர்கள் என்பது முக்கியமானது.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு உணவு மிகவும் முக்கியமானது. புரதம், ஊட்டச்சத்துகள், வைட்டமிங்கள் கொண்ட உணவு வகைகள் சிறந்த உணவுகளாகும். காய்கறிகள், முளை கட்டிய தானியங்கள், பயறு வகைள் சிறப்பான மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. ஒரு குழந்தை தனக்கு வழங்கப்படும் எல்லா உணவுகளையும் ஆராய்கிறது. இது உணவின் சுவை பற்றிய அறிவுக்கு உதவுகிறது. குழந்தைகள் சுவையான, கண்ணைக் கவரும் வண்ணங்களுள்ள உணவினை விரும்பி உண்கிறார்கள். இதனால் தாய்மார்கள் வீட்டில் சமைக்கப்பட்ட, ஆரோக்கியமான, திட உணவின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

இந்திய உணவான மஞ்சள் காய்களை மட்டும் குணப்படுத்துவதில்லை, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கேழ்வரகு போன்ற தானியங்கள் கால்சியத்தையும், முளைகட்டிய பயறு வகைகள் புரதச் சத்துக்களையும் தருகின்றன. பழவகைகளை வைட்டமின் சி போன்ற சத்துக்கைளத் தருகின்றன.

பாக்கெட்டுகளில் அடைக்கபட்ட உணவுகள் இயற்கை உணவுகளை விட அதிக சத்துக்களைத் தருவதாக மக்கள் தவறாக கருதுகின்றனர். சிப்ஸ், பிஸ்கெட்ஸ், டின்னில் அடைக்கப்பட்ட உணவிற்கு பதிலாக, பருப்பு அவித்த நீர், வடிகஞ்சி, இட்லி, உப்புமா, பாலுடன் அவல், சிறுதானிய தோசைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உணவு மூலம் குழந்தைகளின் 5 உணர்வுகளும் செயல்படும் வண்ணம் இருக்க வேண்டும். மூளை வளர்ச்சிக்கான உள்ளீடுகள் முக்கியம்.

வால்நட் விதைகள், எள், சியா விதைகள், சணல் விதைகள், பச்சைப் பட்டாணி, பீன்ஸ்,சோயா பீன்ஸ் போன்றவைகளில் டிஹெச்ஏ உள்ளன. வெல்லம், பேரீச்சை, இரும்பு பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவுகளில் இரும்பு சத்துகள் உள்ளன. மூளை வளர்ச்சிக்குத் தேவையான டிஎன்ஏ இயற்கையான உணவின் மூலம் கிடைக்கின்றன. பதப்படுத்தப்பட்ட உணவு மூளை வளர்ச்சி அடையாது. தானியங்கள் மற்றும் பாலீஸ் செய்யப்படாத பருப்புகள் மூளையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. குழந்தையின் மூளை முதல் 1000 நாள்களில் ஐக்யூவைப் பெறுகின்றன. ஊட்டச்சத்துக்கள் மூளை வளர்ச்சியில் பெறும் பங்காற்றுகின்றன.

இதையும் படிங்க:மாறுகண் குறைபாடு: நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்!

ABOUT THE AUTHOR

...view details