உலகம் முழுவதும் கரோனா வைரஸ் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கிலியட் சயின்சஸ் இன்க் இன் ஆன்டிவைரல் மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் நடந்துவருகின்றன.
இந்த ஆய்வின் நோக்கம், “ரெமெடிசிவிர் (உயிரியல் மருந்துகளால் உருவாக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஆன்டிவைரல்), பாரிசிடினிப் அழற்சி எதிர்ப்பு சிகிச்சை ஆகியவற்றின் கலவையை உருவாக்குவதாகும்.
இதற்கான பணிகளை தேசிய சுகாதார நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தச் சோதனை எதிர்ப்பு மருந்துகள் தற்போது அமெரிக்காவில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் அந்தோணி ஃபௌசி, “இந்த ஆய்வு அழற்சி எதிர்ப்பு முகவரை ரெமெடிசிவரில் சேர்ப்பதால் இறப்பைக் குறைப்பது உட்பட கூடுதல் நன்மைகள் உள்ளதா? என்பதையும் ஆராய்வோம். கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களை மீட்கும் நேரத்தை ரெமெடிவிர் ஒரு சாதாரண அளவிற்கு குறைகிறது என்பதைக் காட்டும் உறுதியான தரவுகள் தற்போது எங்களிடம் உள்ளது” என்றார்.
எலி லில்லி அண்ட் கோ நிறுவனத்தால் ஒலுமியண்ட் என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்படும் பாரிசிடினிப் தடுப்பு மருந்துகள், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சாத்தியமானதாக உள்ளதா? என்று சோதிக்கப்பட்டது.
கரோனா வைரஸால் ஏற்படும் சுவாச நோய்களுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ அல்லது தடுப்பூசிகளோ இல்லாததால், ரெம்டெசிவிர் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.