தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

கரோனாவிற்குப் பின் தீவிரமெடுக்கும் புதிய நோய்: முக்கோர்மிகோசிஸ்! - health news

கரோனாவிற்குப் பின் தீவிரமெடுக்கும் புதிய நோயான முக்கோர்மிகோசிஸ் (Mucormycosis) குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

New Post-COVID19 Health Condition: Mucormycosis
New Post-COVID19 Health Condition: Mucormycosis

By

Published : Feb 20, 2021, 6:34 AM IST

தற்போது கரோனா வைரஸ் தொற்றிலிருந்து உலக நாடுகள் அனைத்தும் மீண்டுவருகின்றன. இந்த மீட்புக்குப் பின்னரும் அதிகமான மக்கள் அதன் அறிகுறிகளை முன்வைத்து வருவதால், பொதுவாக மக்களுக்குத் தெரியாத ஒரு நோய், இந்தியாவில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அது முக்கோர்மிகோசிஸ் எனப்படும் ஒரு பூஞ்சை நோயாகும். இது மிகவும் அரிதான, தீவிரமான ஒரு நோயாகும். அதன் வழக்குகள் தற்போது கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துள்ளன.

இது குறித்து நமது சுகிபவ குழுவினர் தெலங்கானா அரசு காந்தி மருத்துவமனையின் மருத்துவர் எம். ராஜா ராமிடம் உரையாடினர். அதில், “கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளிடம் இந்தப் பெருந்தொற்று நோயை நாங்கள் காண்கிறோம்.

கோவிட் ஒரு தீநுண்மி என்பதால், கரோனாவிலிருந்து மீட்கப்பட்ட நோயாளிகளிடமும் இது காணப்படுகிறது. கடந்த ஏழு முதல் எட்டு மாதங்களில் எங்கள் மருத்துவமனையில் சுமார் 10 நோயாளிகளைப் பார்த்திருக்கிறோம்” என்றார்.

கூடுதலாக, மெடிக்கோவர் மருத்துவமனை நுரையீரல் வல்லுநர் மருத்துவர் மேக்னா ரெட்டியிடமும் கேட்டோம். அதற்கு அவர், “கோவிட்டுக்கு முன்பு நாங்கள் ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு வழக்குகளைத்தான் பார்த்தோம். ஆனால், தற்போது இங்கு சுமார் 60 வழக்குகள் பதிவாகியுள்ளன” என்று கூறினார்.

தீவிரமெடுக்கும் இந்த நோய் குறித்து இரண்டு மருத்துவர்கள் தங்களது கருத்தைத் தெரிவித்துள்ள நிலையில், இந்தக் கரோனா தீநுண்மி பற்றி மக்கள் குறைவாகவே அறிந்துள்ளதால், இது குறித்து அறிந்து அலசுகிறது ஈடிவி பாரத் சுகிபவ குழு.

முக்கோர்மிகோசிஸ் என்றால் என்ன?

நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, முக்கோர்மிகோசிஸ் முன்பு ஜிகோமைகோசிஸ் என்று அழைக்கப்பட்டது. முக்கோர்மிகோசிஸ் அரிதான பூஞ்சை தொற்று நோயாகும்.

இந்த நோய் முக்கியமாக சுகாதார குறைபாடுகள் உள்ளவர்களுக்கும், ஏற்கனவே சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் நோய் எதிர்ப்பு குறைபாட்டை ஏற்படுத்துகிறது. அதாவது, சில வெளிநாட்டு பாக்டீரியா அல்லது நம் உடலில் நுழையும் தீநுண்மிகளை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை இது குறைக்கிறது.

இது பொதுவாக எளிதாகச் சுவாசப் பாதைகள் வழியாக ஊடுருவுகிறது. அதுமட்டுமின்றி வெட்டு, எரிப்பு உள்ளிட்ட தோல் பிளவுகள் மூலமாகவும் இந்தப் பூஞ்சை பரவுகிறது.

பரவலுக்கான காரணங்களும், அறிகுறிகளும்

இந்தத் தொற்று நோயல்ல. இது இலைகள், மண், அழுகும் மரப் பொருள்கள் மூலமாகப் பரவுகிறது.

1.காண்டாமிருகம் முக்கோர்மிகோசிஸ்

  • ஒருபக்க முக வீக்கம்,
  • தலைவலி,
  • சைனஸ் பிரச்சினை,
  • வாயின் மேல்புறத்தில் புண்கள் ஏற்படுதல்,
  • காய்ச்சல்

2.நுரையீரல் முக்கோர்மிகோசிஸ்

  • காய்ச்சல்
  • இருமல்
  • நெஞ்சு வலி
  • மூச்சுத் திணறல்

3. இரைப்பை குடல் முக்கோர்மிகோசிஸ்

  • வயிற்று வலி,
  • வாந்தி,
  • இரைப்பை குடல் உதிரப்போக்கு

4. தோல் முக்கோர்மிகோசிஸ்

  • கொப்புளங்கள்,
  • பாதிக்கப்பட்ட பகுதி கறுப்பு நிறமாக மாறக்கூடும்

மேற்கண்ட பகுதிகளில் முக்கோர்மிகோசிஸ் வந்தால் இதுபோன்ற அறிகுறிகள் காணப்படும். இது கொஞ்சம் அல்ல, நிறையவே கவனம் செலுத்த வேண்டிய நோயாகும். இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின், இதை ஆய்வகச் சோதனை மூலம் கண்டறிந்து மருத்துவரை உடனே அணுகி சிகிச்சைப் பெறுவது முக்கியமாகும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை அளவுக்குக்கூட செல்ல வாய்ப்பு உண்டு. அதனால், சரியான நேரத்தில் சிகிச்சை பெறப்படாவிட்டால், இந்த நோயும் ஆபத்தான விளைவே ஏற்படுத்தும்.

இதையும் படிங்க...2020ஆம் ஆண்டில் கரோனா ஏற்படுத்திய தாக்கம் : ஒரு சிறு பார்வை

ABOUT THE AUTHOR

...view details