பொதுவாகவே ஒரு மனிதருக்கு ஏழு மணி நேர தூக்கம் போதுமானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், வேலைப்பளு மற்றும் அதிக மன அழுத்தம் காரணமாக சரியாக தூங்க முடியாமல் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் சில எண்ணெய் வகைகளை சரியாக பயன்படுத்தினால் நிம்மதியாக தூங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பக் எண்ணெய்:இதன் இரண்டு துளியை தூங்குவதற்கு முன்னர் தலையில் தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் காலையில் எழுந்து குளித்த பிறகு, மன நிம்மதி கிடைக்கும்.
பிராங்கின்சென்ஸ் (Frankincense): ஒரு சிறிய கிண்ணத்தில் நான்கு முதல் ஐந்து துளிகளை இட வேண்டும். பின்னர் இதனுள் ஒரு பஞ்சினை மூழ்கடித்து அதனை நுகர்ந்து பார்க்க வேண்டும். அல்லது இந்த எண்ணெய் துளிகளை படுக்கையை சுற்றி சிறிது தெளிக்க வேண்டும். இதன் வாசனையால் தூக்கமின்மையை தவிர்க்கலாம்.