குளிர்காலம் என்பது நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு கடினமான காலமாக திகழ்ந்து வருகிறது. ஏனென்றால், நீரிழவு நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள், உடற்பயிற்சிகள் குளிர்காலத்தில் பின்பற்ற முடியாமல் போக அதிக வாய்ப்புள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது முக்கியமாகும். இந்தியாவில் மட்டும் சுமார் 50 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் எச்.பி. ஜிண்டால் நேச்சர் க்யூர் நிறுவனத்தின் துணை தலைமை மருத்துவ அலுவலர் ஹெச்.பி. பாரதி தெரிவித்துள்ளார். வரும் 2025க்குள், 60 மில்லியனாக எண்ணிக்கை அதிகரிக்கூடும் என எச்சரிக்கிறார். எனவே, குளிர்காலத்தை நீரிழிவு நோயாளிகள் கட்டுப்படுத்த 10 இயற்கை மற்றும் யோகா உதவிக்குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.
டயட்
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பயறு, பீன்ஸ் மற்றும் ஓட்மீல் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இனிப்புகள், கொழுப்புகள் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், நீரிழிவு நோயாளிகள் உலர்ந்த பழங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றில் உள்ள பிரக்டோஸ் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
உடலில் நீரேற்றம்
உடலை நீரேற்றுத்துடன் வைத்திருப்பது அவசியம். மற்ற பானங்களில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளதால், நீர் அருந்துவது சிறந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
யோகா
நீரிழிவு நோயாளிகளுக்கு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க யோகா பெரிதும் உதவுகிறது. யோகா செய்கையில் தசைகள் வலுவான நிலையில் மாறுவதால், ரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
சிகிச்சை முறைகள்
பிசியோதெரபி, ஹைட்ரோ தெரபி போன்ற சிகிச்சை முறைகள் உடலுக்கு நல்லிணக்கத்தை பல வழிகளில் மீட்டெடுக்க முடியும். இவை உடல் எடை இழப்புக்கு உதவுகின்றன, மன அழுத்த அளவைக் குறைக்கின்றன, ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.