நடு இரவில் உறங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென தூக்கம் கலைந்து எழுந்து குறட்டை விட்டுக்கொண்டிருந்ததை உணர்ந்துள்ளீர்களா? அல்லது உங்கள் அருகில் உறங்கிக்கொண்டிருந்த நபர் உங்களுடைய குறட்டையால் எழுந்திருக்கிறாரா? இப்படி ஏதேனும் உங்களுக்கு நடந்திருந்தால், உங்களுக்கு உடல் பருமன் அல்லது அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா (obstructive sleep apnea) எனப்படும் தூக்கத்தில் மூச்சுத்திணறும் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.
சிலருக்கு அதிகப்படியான மது உட்கொள்ளுதல், மயக்க மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல், கர்ப்பம் போன்ற காரணிகளாளும் குறட்டை பிரச்னை ஏற்படலாம். தொண்டையில் உள்ள திசுக்களில் அதற்குள் ஏற்படும் போது குறட்டை ஏற்படுகிறது. ஒருவேளை உங்களுக்கும் குறட்டை பிரச்சினை இருக்கிறது என்றால் கவலைப்படாதீர்கள். குறட்டை பிரச்சினையை சமாளிக்க செய்யவேண்டிய எளிமையான இயற்கையான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம்.
முதுகினால் உறங்காதீர்கள்:
நீங்கள் முதுகினால் தூங்கும்போது அதிகம் குறட்டை விடுவதை கவனித்திருப்பீர்கள். ஏனென்றால் உங்களது நாக்கு வாய்க்குள் நகர்ந்து காற்று ஓட்டத்தைத் தடுக்கிறது. இதன் காரணமாக குறட்டை ஏற்படுகிறது. எனவே தூங்கும் நிலையை மாற்ற முயற்சியுங்கள். ஒரு பக்கமாய் திரும்பி படுக்கும்போது குறட்டை விடுவதைத் ஓரளவு தவிர்க்க முடியும்.
எடையை குறையுங்கள்:
பிறருடன் ஒப்பிடுகையில் அதிக எடையுள்ள நபர்களும், உடல் பருமனாக இருக்கும் நபர்களும் குறட்டை அதிகமாக விடுவதை கவனிக்கலாம். நீங்கள் அதிக எடை உள்ளவர்களாக இருந்தால், சற்று எடையை குறைக்க முயற்சி செய்யுங்கள். அடிக்கடி உடற்பயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியமான உணவை உண்டால் குறட்டை விடுவதைத் தவிர்க்க முடியும்.
மது குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்:
தூங்குவதற்கு முன்பாக மது குடிப்பது குறட்டைப் பிரச்சினை இருப்பவர்களுக்கு நல்லது அல்ல. மது குடிப்பதனால் உங்கள் தொண்டையில் உள்ள தசைகள் தளர்வாகி குறட்டை ஏற்படுகிறது. எனவே உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்குள் மது குடிப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள்.