ஹைதராபாத்: பண்டிகை காலத்தில் நோய்த் தொற்றுகள் கட்டுக்கடங்காமல் செயலாற்றி வருகிறது. இதிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகளையும், சில உபகரணங்களையும் உங்களுடனே வைத்திருப்பது அவசியமாகிறது.
பண்டிகை காலத்தின்போது பாதுகாப்பு மிகமிக அவசியம். வெளிப்புறமாக இருந்தாலும் அல்லது உட்புறமாக இருந்தாலும், எந்த அவசர காலங்களில் கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஐந்து சுகாதாரப் பொருட்கள் கையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
எந்தவொரு பற்றாக்குறையையும், பின்னர் செய்யும் அதிக செலவினங்களையும் எதிர்கொள்ளாமல் இருக்க அவற்றை முன்கூட்டியே வாங்குவதும் அறிவுபூர்வமான ஒன்றாகும்.
- உடற்சூடு அறிந்துகொள்ளும் கருவி
வெப்பமானி, ஒவ்வொருவர் வீடுகளிலும் இருக்க வேண்டிய ஒன்று. ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க ஒரு ஆக்சிமீட்டரும் வீடுகளில் இருப்பது அவசியம்.
பாதரச வெப்பமானி: டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் உருவாக்கிய பாதரச வெப்பமானிதான் இன்றும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில், ஃபாரன்ஹீட் மற்றும் செல்ஷியஸ் என்ற இரண்டு வகையான அளவுகளையும் அறிந்துகொள்ளலாம்.
டிஜிட்டல் தெர்மோமீட்டர்: நவீன கண்டுபிடிப்பான டிஜிட்டல் தெர்மோமீட்டர் கருவியும் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இக் கருவி மூலம், உடல் வெப்பநிலை எவ்வளவு என்பதை டிஜிட்டல் திரையில் எண்களாகப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இது பெரும்பாலும், ஃபாரன்ஹீட் அளவில்தான் உடல் வெப்பநிலையை அளவிட்டு காட்டும்.
அகச்சிவப்பு வெப்பமானி: நவீன யுகத்தின் தேவைக்கு ஏற்ப, உடலை தொடாமலேயே உடலின் வெப்பநிலையைக் கண்டறிவதற்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக் கருவி மூலம் அகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு, ஒருவரின் உடல் வெப்பநிலையைத் தெரிந்துகொள்ளலாம். இவை பெரும்பாலும் விமான நிலையங்களில், பயணம் மேற்கொள்ள வருபவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளவும், வெளிநாட்டுப் பயணிகள் மூலம் பன்றிக் காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காகவும் பயன்படுகிறது.
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் முகக்கவசம் ஒன்றைக் கண்டிப்பாக அணிய வேண்டும். நீங்கள் வீட்டில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. எல்லா நேரங்களிலும் நீங்கள் உங்களுடன் முகக்கவசம் ஒன்றைக் கண்டிப்பாக எடுத்துச்செல்ல வேண்டும்.
உங்களுடைய முகத்தில் கடுமையான தோல் நோய்த் தன்மை அல்லது சுவாசப் பிரச்னை உள்ளிட்டவை இருந்தாலோ, உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது மூச்சுத் திணறல் பிரச்னை இருந்தாலோ முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஐவர்மெக்டின், அஸித்ரோமைஸின், வைட்டமின் சி, ஸிங்க் ஆகிய மாத்திரைகளை எப்போதும் உடன் வைத்திருக்கவேண்டும். வைட்டமின் டி, வைட்டமின் சி உள்ளிட்ட மருந்துகளையும் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். ஒமேகா 3 அமிலம் கொண்ட மருந்துகளும் உடன்வைத்திருப்பது நல்லது.
சிறிய அளவிலான நீராவிக் கருவி தற்போது அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. அதனை வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். வெளியில் செல்லும்போதும், வீடு திரும்பிய பின்னும் சில நிமிடங்கள் அதில் நீராவி எடுத்துக்கொள்வது பல வகை உபாதைகளிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள உதவும்.
கரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பல நேரங்களில் நோயாளிகளின் உயிரைக் காக்கும்.
எனவே மருத்துவமனையை மட்டும் நம்பி இருக்காமல், சந்தையில் கிடைக்கும் சிறிய அளவிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கி வைத்து கொள்வது நல்லது. மேலும், இதனை பயன்படுத்தும் முறை குறித்தும் வீட்டில் உள்ள அனைவருக்கும் புரிதலை ஏற்படுத்த வேண்டும்.