தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

தாய்மை அடையும் சாத்தியக்கூறுகள் அதிகம்- புதிய தொழில்நுட்பம் - தாய்மையடையும் சத்தியக்கூறுகள் அதிகம்

செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளை நாடுவோர், விரைவில் தாய்மை அடையும் சாத்தியத்தை அதிகரிக்க உதவும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

ai
ai

By

Published : Jul 15, 2020, 1:34 AM IST

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, சிகிச்சைக்குப் பொருத்தமான கருமுட்டைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போது, செயற்கை கருத்தரிப்புக்காகத் தெரிவு செய்யப்படும் முட்டைகள், ஒவ்வொன்றாய் ஆராயப்பட்டு, அவற்றின் தன்மைக்கு ஏற்ப தரம் பிரிக்கப்படுகின்றன.

ஆனால், அனைத்து முட்டைகளையும் ஒரே நேரத்தில் கண்காணித்து எது கருத்தரிப்புக்கு உகந்தது என்பதை செயற்கை நுண்ணறிவின் மூலம் கண்டறிய முடியும். கருத்தரிப்பு சேவைகளை வழங்கும் விர்சுவஸ் ஹெல்த் எனும் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

சுகாதார அறிவியல் ஆணையம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த மாதத்திலிருந்து அந்தத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரும் என்றாலும், கருத்தரிக்க உதவும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குழந்தையின் பாலினத்தை தெரிவு செய்வது போன்ற சாத்தியங்கள் ஏற்படுமோ என்பது குறித்து சுகாதாரத்துறை அக்கறை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details