தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

பீட்ரூட்டில் இவ்வளவு நன்மைகளா? - Powerful Antioxidant Beetroot

நாவல் பழ நிறத்திலிருக்கும் பீட்ரூட்டில் முகப்பொலிவிலிருந்து புற்றுநோய் செல் அழிப்பு வரை ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவை குறித்து இங்கு காணலாம்.

Beetroot
பீட்ரூட்

By

Published : Jan 15, 2021, 11:33 AM IST

பீட்ரூட் கண்கவர் காய்கறி மட்டுமல்ல, நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களைத் தன்னகத்தே கொண்டது.

  • வைட்டமின் பி6, வைட்டமின் சி
  • கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம்
  • இரும்புச்சத்து, நார் சத்து மற்றும் பல சத்துக்கள் பீட்ரூட்டில் பொதிந்துள்ளன.

பயனுள்ள பீட்ரூட்!

பீட்ரூட், வேர்களில் விளையும் காய். இதை சிறந்த உணவு என்று சொல்வதைவிட உடலின் செயல் திறனை அதிகரிக்க உதவும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பீட்ரூட் சாப்பிடுவதால் அத்லடிக் பெர்மான்ஸ் (athletic performance) அதிகமாகும். அதாவது உடற்பயிற்சி செய்வதற்கான வலு அதிகரிக்கும்; விளையாட்டில் ஆர்வமுடையவர்களுக்கும், உடற்பயிற்சி பிரியர்களுக்கும் இது செம்ம கிஃப்ட்.

பீட்ரூட்

பீட்ரூட் ஜூஸ், வேக வைத்த பீட்ரூட் அல்லது சாலட், பொரியல் என எந்த வகையில் வேண்டுமானாலும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

  • ஊட்டச்சத்துகள்

பீட்ரூட்டில் 88 விழுக்காடு நீர்ச்சத்து உள்ளது. இதில் பெட்டானின், வல்காக்சாண்டின் போன்ற நிறமிகளும், கனிம நைட்ரேட்டுகளும் உள்ளன.

  • ரத்த அழுத்தத்தை சீராக்கும்

உயர் ரத்த அழுத்தம் சில இதய நோய்களுக்கு வழிவகுக்கலாம். சில ஆய்வுகளின்படி பீட்ரூட் இந்த நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதிலுள்ள கனிம நைட்ரேட் உயர் ரத்த அழுத்தத்தை வெகுவாகக் குறைகிறது. இதனால் இதய நோய்கள் முன்கூட்டியே தவிர்க்கப்படுகின்றன.

  • அத்லடிக் பெர்மான்ஸ்

பீட்ரூட் ஜூஸ் பிளாஸ்மா நைட்ரேட் அளவை அதிகரிப்பதன் மூலம் உடல் செயல்திறனை அதிகரிக்கிறது. கூடவே, ஆக்சிஜன் அளவையும் மேம்படுத்தும். கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் ஆற்றல் இழப்பிற்கு இது சிறந்த இளைப்பாற்றி.

  • செரிமான சக்தியை வலுவாக்கும்

பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தினை தூண்டுகிறது. அடிக்கடி பீட்ரூட் சாப்பிடுவதால் தீராத மலச்சிக்கல் தீரும். மூல நோய்களுக்கும் இது ஏற்றது.

  • புற்றுநோய் எதிர்ப்பு

சில வகை புற்றுநோய்களுக்கு பீட்ரூட் சிறந்த எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்கள் சில புற்றுநோய் செல்களுக்கு எதிரான ஆற்றலை கொண்டிருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது உடலில் இருக்கும் தேவையற்ற செல்களை கண்டறிந்து அழிக்க உதவும்.

  • ஆன்டி ஆக்ஸிடன்

பீட்ரூட்டில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கலுக்கு எதிராக செயல்படுகிறது. அல்சர் போன்ற நோய்களுக்கும், மூட்டுகளில் ஏற்படும் வலிக்கும் சிறந்த நிவாரணி.

  • ரத்தசோகை

முறையான ஊட்டச்சத்து கிடைக்கப் பெறாமல் ரத்த சோகையினால் அவதிப்படுபவர்களுக்கு பீட்ரூட் வரப்பிரசாதம். இதில் நிறைந்து காணப்படும் இரும்பு சத்தும், போலிக் அமிலமும் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.

  • மூளைக்கு சீராகும் ரத்த ஓட்டம்

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதை டிமென்ஷியா என்பர். இது வயதானவர்களை அதிகம் பாதிக்கும். இந்தப் பிரச்னையை குறைப்பதில் பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் முக்கிய செயலாற்றுகின்றன. நினைவாற்றலை மேம்படுத்தும் ஆற்றலும் இதற்குண்டு.

  • முகப்பொலிவு

முகப்பொலிவைக் கூட்டும். உதட்டு கருமை, சரும வறட்சி, தலைமுடி பிரச்னை போன்றவற்றைக் குறைக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details