நெதர்லாந்து: தினமும் காலையில் செய்யும் உடற்பயிற்சி இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக யூரோப்பியன் ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் கார்டியாலஜி நாளிதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழக மருத்துவ மைய போராசிரியர் கலி அல்பலாக் கூறுகையில், பொதுவாக உடற்பயிற்சிக்கும் இதய ஆரோக்கியத்திற்கு தொடர்புள்ளது என்பது பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், நாங்கள் உடற்பயிற்சியின் நேரங்களின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறோம். அந்த வகையில் நேரங்களை காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் பிரித்து ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வு 42 முதல் 78 வயதுக்கு இடைப்பட்ட 86,657 பேரிடம் நடத்தப்பட்டது. அதில் 58 சதவீதத்தினர் பெண்களாகும். அதில் 2,911 பங்கேற்பாளர்கள் கரோனரி தமனி நோயால் பாதிக்கப்பட்டவர்கள். 796 பேருக்கு முதல்கட்ட பக்கவாதம் உள்ளது.