டெல்லி:இந்தியாவில் இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனையில் 40க்கும் மேற்பட்ட இருமல் தயாரிப்பு நிறுவனங்கள் தோல்வி அடைந்ததாகவும், இதற்கும் உலகளவில் 141 குழந்தைகளின் இறப்பிற்கு தொடர்புள்ளதாகவும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO)தெரிவித்துள்ளது.
இது தொட்ர்பாக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) வெளியிட்ட அறிக்கையில், "மொத்தம் 1,105 நிறுவனங்களின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 59 நிறுவனங்களின் மாதிரிகள் 'தரமற்றது' என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில், மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் பட்டியல் சி.டி.எஸ்.சி.ஓ அமைப்பால் வெளியிடப்பட்டது. மருந்துகள் அனைத்தும் சோதனையிடப்பட்டு 'தரமற்றது', 'கலப்படம்' அல்லது 'போலியானவை' என்ற பிரிவின் கீழ் பிரிக்கப்பட இருந்தது.