- காலை உணவில் இணை உணவாக தூதுவளை சட்னி, துவையல், இஞ்சி துவையல் சேர்த்துக்கொள்ளலாம். மதிய உணவில் கொள்ளுத் துவையல், கொள்ளு ரசம் சேர்த்துக்கொள்ளலாம்.
- தக்காளி ரசத்துக்குப் பதிலாக மிளகு ரசம், கண்டத்திப்பிலி ரசம் போன்றவை சேர்த்துக்கொள்ளலாம். மிளகு, சீரகம், திப்பிலி சேர்த்து காரக்குழம்பு வைத்து சாப்பிடலாம்.
- பழங்கள் குளிர்ச்சி ஏற்படுத்தும் என்று பலர் தவிர்த்துவிடுகின்றனர். இருப்பினும், பழங்கள் நோய் எதிர்ப்பு சக்திகொண்டது என்பதால், அதில் மிளகு சேர்த்து சாப்பிடலாம்.
- உணவு உண்ணும் போது, பொதுவாக சூடாக தயார் செய்து சாப்பிடுவதே நல்லது. உணவை ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் பழக்கத்தை மழைக்காலத்தில் தவிர்ப்பது நல்லது.
- இரவில் தயிர், கீரை போன்றவற்றைச் சேர்க்கக் கூடாது. மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, கொள்ளுப்பயிறு சேர்ந்து பொடியாக்கி அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.
- சுக்கு, மிளகு, தனியா, ஏலக்காய் நான்கையும் பொடியாக்கி நீரில் கொதிக்கவிட்டு சுக்கு, வெந்நீர் அல்லது சிறிது பனைவெல்லம் சேர்த்து சுக்கு காபி அருந்துவது நல்லது.
மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் வராமலிருக்க என்ன சாப்பிடலாம்? - காரக்குழம்பு
சென்னை: மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் வராமல் இருக்க நாம் உணவில் சிலவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது. அவை பின்வருமாறு:
rainy season foods to prevent colds and fever