தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

கரோனா விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் - மருத்துவர் எம்.வி. ராவ் - எந்த அறிகுறிகளும் இல்லாத நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

கரோனா வைரஸ் தொற்று பரவல், பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் எம்.வி. ராவ் கூறுகிறார்.

Lets raise the bar of awareness about Covid-19, says physician
Lets raise the bar of awareness about Covid-19, says physician

By

Published : Jul 11, 2020, 8:06 AM IST

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதுமட்டுமின்றி வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த விஞ்ஞானிகள், மருத்துவ வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்து வரும் நிலையில், நாட்டில் கரோனாவின் பாதிப்பு எட்டு லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு மட்டுமின்றி மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

இது குறித்து, புகழ்பெற்ற மருத்துவர் எம்.வி. ராவ் கூறுகையில், “கரோனா வைரஸ் ஒரு தொற்று. உடலில் இந்த வைரஸின் ஆயுட்காலம் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள்தான். வைரஸால் பாதிக்கப்பட்ட 85 விழுகாட்டினருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஒருவருக்கு அறிகுறி இல்லாமல் கூட வைரஸ் தொற்று ஏற்படக்கூடும். சிறிது நேரம் கழித்து, உடலில் ஆன்டிபாடிகள் உருவாகத் தொடங்குகின்றன. இதில் 15 விழுக்காட்டினருக்கு மட்டுமே அறிகுறிகள் உள்ளன. இவர்களில் ஐந்து விழுக்காட்டினருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு வைரஸ் குறித்த விழிப்புணர்வும், வைரஸிலிருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையும் இருந்தால் பயப்பட தேவையில்லை. கரோனா வைரஸ் முதலில் சுவாச மண்டலத்திற்குள் நுழைகிறது. இதனால் லேசான தொண்டை வறட்சி, காய்ச்சல் ஏற்படுகிறது. இது சாதரணமாக குணப்படுத்தலாம். ஆனால் ஒரு சிலருக்குதான் நிமோனியாவுக்கு வழிவகுக்கிறது. இந்த காலத்தில் நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமே தவிர, பயப்படுவதோ, பீதியடையவோ நம்மை கரோனாவிலிருந்து பாதுகாக்காது” என்றார்.

மருத்துவர் எம்.வி. ராவ் வழங்கிய சில குறிப்புகள்...!

  • யாருக்கு கரோனா சோதனை தேவை?

*இருமல், தும்மல், காய்ச்சல், தொண்டை பிரச்னை இருப்பவர்களுக்கு

*உற்றாருக்கோ, சுற்றாருக்கோ கரோனா ஏற்பட்டால்

*சுவாச பிரச்னை உள்ளவர்களுக்கு

*கடந்த இரண்டு வாரத்திற்கு முன் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்திருந்தால்

  • தனிமைப்படுத்தலில் என்ன செய்ய வேண்டும்?

*எதைப் பற்றியும் கவலையடையாதீர்கள்.

*பெருந்தொற்றை நினைத்து கவலைப்பட்டால், எதிர்ப்பு சக்தி அளவு குறையும்

*மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்

*பிடித்த புத்தகங்களை வாசிக்க வேண்டும்

*கரோனா பாதிப்பு, உயிரிப்பு பற்றியான செய்திகளை படிக்க, பார்க்க வேண்டாம்.

  • கரோனா பாதிப்பில் 5 வகைகள் எவை?

*அறிகுறியற்ற

*லேசான அறிகுறி

*மிதமான அறிகுறி

*அதிகமான அறிகுறி

*ஆபத்தான அறிகுறி

  • எந்த அறிகுறிகளும் இல்லாத நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

*பொதுவாக கரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. குறிப்பாக அறிகுறிகள் இல்லாமலேயே மற்றவர்களுக்கு பரவுகிறது.

*2-3 நாள்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

*பொதுவாக 101 பாரன்ஹீட்டில்தான் காய்ச்சல் இருக்கும்

*சில நேரங்களில் இருமல் இருக்கும்

*சில நேரங்களில் தொண்டை வறட்சி இருக்கும்

*ரத்ததில் ஆக்ஸிஜன் அளவு 95 விழுக்காட்டிற்கு மேல் இருக்கும்.

*மேலே கூறப்பட்டுள்ள அறிகுறி இருப்பின் 10 நாளுக்கு தனிமைப்படுத்தலிலும், அதன் பின்னான 7 நாள்கள் வெளியிலும் செல்ல வேண்டாம்.

  • கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள்?

*வைரஸ் பாதிப்பு உள்ளது என கண்டறியப்பட்டாலும், சிலருக்கு தெரியும் படியான அறிகுறிகள் இருப்பது இல்லை

*அறிகுறி இல்லாமல் இருக்கும் 60 வயதிற்கு குறைவானவர்கள் பயப்பட தேவையில்லை

*அவர்களுக்கு எந்த சிறப்பு மருந்தும் தேவையில்லை

*நல்ல உறக்கம், ஒய்வை உறுதிப்படுத்துங்கள்

*மருத்துவரால் கண்டறியப்பட்ட ரத்த அழுத்தம், டயபட்டீஸ், இதய, சீறுநீரக, நுரையீரல், மூளை பிரச்னை உள்ளவர்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது.

*எய்ட்ஸ், புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் மருத்துவமனையில் இருப்பது ரொம்ப நல்லது.

*அறிகுறியற்ற நோயாளிகள் 10 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க...ஒடிசாவின் அரிசி கிண்ணத்தில் பயமுறுத்தும் புற்றுநோய்!

ABOUT THE AUTHOR

...view details