நியூ ஜெர்ஸி: ஜான்சன் அண்ட் ஜான்சன் முதல் தவணை தடுப்பூசி கூட கோவிட் மற்றும் டெல்டா வகை வைரஸ்களிலிருந்து பாதுகாக்கிறது என்பது ஆய்வக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் அறிக்கையின்படி, “வேகமாக பரவி வரும் டெல்டா மாறுபாடு வகை வைரஸ்கள் மற்றும் மிகவும் பரவலாக உள்ள SARS-CoV-2 வைரஸ் வகைகளுக்கும் எதிராக வலுவான, தொடர்ச்சியான செயல்பாட்டை ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி உருவாக்கியது.
ஜான்சன் அண்ட் ஜான்சன்
கூடுதலாக, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்துள்ளதை தரவுகள் வாயிலாக அறிய முடிகிறது. இது தொடர்பான தரவுகள் விரைவில் சமர்பிக்கப்படவுள்ளன. இதுமட்டுமின்றி ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி கடுமையான மற்றும் சிக்கலான நோய்களுக்கு எதிராக கூட 85 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.
அதாவது கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு கடின நிலையில் சிகிச்சை பெற்றவர்கள் கூட உயிர் பிழைத்துள்ளனர். அதேபோல் வேகமாக பரவிவரும் பீட்டா, டெல்டா வகை வைரஸ்களிலிருந்தும் பாதுகாக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஒப்புதல்
இது குறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவரும், தலைமை அறிவியல் அலுவலருமான எம்.டி. பால் ஸ்டோஃபெல்ஸ் கூறுகையில், “எங்கள் தடுப்பூசி கோவிட் (COVID-19) க்கு எதிராக நீடித்த பாதுகாப்பை வழங்குகிறது.
டெல்டா வகை வைரஸ்களுக்கு எதிரான செயல்பாட்டை உருவாக்குகிறது. இது மருத்துவ தரவுகள் மூலம் உறுதிப்பெறுகிறது” என்றார். ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள் பல்வேறு நாடுகளிலும் கிடைக்கின்றன. இந்தத் தடுப்பூசிகளை அவசர காலத்துக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு ஒப்புதலும் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : 2022க்குள் ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகள்: போரிஸ் ஜான்சன்