ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ஆம் தேதி, 'உலக சைவ தினம்' கொண்டாடப்படுகிறது. இது சைவத்தை ஊக்குவிப்பதற்காகவும், ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பது குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அப்படியான இந்த நன்னாளை முதன் முதலில் வட அமெரிக்க சைவ சங்கம் தான் 1977ஆம் ஆண்டில் அனுசரித்தது.
சைவ உணவு பிரியர்களின் வகைகள்...!
இந்தியாவின் தேசிய சுகாதார தளமான என்எச்பி-யின்படி, சைவ உணவு உண்பவர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
- சைவ உணவு: இவர்கள் தாவர அடிப்படையிலான உணவுகளை மட்டுமே உண்பார்கள். முட்டை, பால், தேன் போன்ற எந்தவொரு விலங்கைச் சேர்ந்ததாகவும் இருக்காது.
- லாக்டோ-சைவம்: இவர்கள் முட்டைத் தவிர்த்து தாவர உணவு, பால் பொருட்களை உண்பார்கள்.
- லாக்டோ-ஓவோ சைவம்: இவர்கள் தாவர உணவு, பால் பொருட்கள், முட்டைகளை உண்பார்கள்.
ஹெல்தி டயட்..!
நீங்கள் எந்த வகை சைவ உணவுகளை உண்பவராக இருந்தாலும், உடலின் சரியான செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெற ஆரோக்கியமான சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து என்.ஹெச்.பி(Natural Health Product) வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை,
- வைட்டமின் பி 12: பால் பொருட்கள், முட்டை, தானியங்கள், ரொட்டி, அரிசி பானங்கள்
- வைட்டமின் டி: பால், சூரிய ஒளி
- கால்சியம்: பால் பொருள்கள், அடர் பச்சை இலை காய்கறிகள், ப்ரோக்கோலி
- புரதம்: பருப்பு வகைகள், பால் பொருட்கள் (பால் மற்றும் சீஸ்), முட்டை, உலர்ந்த பீன்ஸ், கொட்டைகள்
- இரும்பு: முட்டை, உலர்ந்த பீன்ஸ், உலர்ந்த பழங்கள், தானியங்கள்
- துத்தநாகம்: கொட்டைகள், தானியங்கள், உலர்ந்த பீன்ஸ், பூசணி விதைகள்