சமூகமும், கல்வியும் எதிர்பாராத மன இறுக்கத்தை எவ்வாறு கையாள்வது என்று கற்றுத் தருவதில்லை. மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர் ஏற்றுக் கொள்ளும்போது அனைத்தும் சரியாக நடக்கும். ஆனால், பெரும்பாலான பெற்றோர் இந்த வகையான பிரச்சினைகளை கையாள தாயாராக இல்லை என்பது தான் நிசப்தம். சில நேரங்களில் பெற்றோரும் அவர்கள் எதிர்பார்த்த குழந்தை பிறக்கவில்லை என்றும், மன இறுக்கம் பாதிக்கப்பட்ட குழந்தையின் செயல்பாடுகளைக் கண்டும் வேதனை அடைகின்றனர்.
இது குறித்து மருத்துவ உளவியலாளர் சம்ருதி பட்கர் கூறுகையில், "மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கும் போது, வாழ்க்கையில் எதிர்பாராத மன அழுத்த மாற்றங்களை இயல்பாகவே கடந்து செல்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இதை நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பற்றி பேசுவது மிகவும் முக்கியம். இது மாற்றத்திற்கு வழிவகுக்குகிறது" என்றார்.
பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னனென்ன?
அதிர்ச்சி மற்றும் மறுப்பு - உங்கள் குழந்தையின் நடத்தையைக் கண்டு மருத்துவர் நரம்பியல் பாதிப்பு உள்ளது என தெரிவிக்க முயற்சி செய்யும் போது, அதை மறுத்து தவறுதலாக நோயறியப்பட்டுள்ளது என கூறுவது.
குற்ற உணர்வு -தாய்மார்கள் தனது செயல்பாடுகளால் நரம்பியல் பாதித்த குழந்தை தங்களுக்கு உள்ளதோ என்று குற்ற உணர்ச்சிக்கு ஆளாவது.