பொதுஇடங்களில் மக்கள் இயர்போன்களை பயன்படுத்துவது என்பது தற்போது பலமடங்கு அதிகரித்துவிட்டது. வெளியே எவ்வளவு சத்தம் இருந்தாலும், இயர்போன்களை அணிந்துகொள்வதன் மூலம், அதிலிருந்து தப்பித்து நமக்கு பிடித்த இசையில் மூழ்க இந்த இயர்போன்கள் உதவுகின்றன.
வீடுகளிலும் மற்றவர்களுக்கு எவ்வித தொந்தரவும் அளிக்காமல், பாடல்களை கேட்கவும் படங்களை பார்க்கவும் இயர்போன்கள் பேருதவியாக உள்ளது. இருப்பினும், இயர்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால், உடல் ரீதியாக சில முக்கிய பாதிப்புகள் ஏற்படும் என்றும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
செவித்திறன் குறைபாடு
இயர்போன்களை பயன்படுத்தும்போது, பாடல்களை நேரடியாக நமது காதிற்குள் அனுப்புகிறோம். இது பல ஆபத்துகளை விளைவிக்கும். அதாவது ஒருநபர் 90 டெசிபல் அளவில் பாடல்களை கேட்கிறார் என்றால், அது செவித்திறனில் சில பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.
அதேநேரம் அவர் 100 டெசிபல் அளவில் சுமார் 15 நிமிடங்கள் வரை இயர்போன்களை பயன்படுத்துகிறார் என்றால், அது நிச்சயம் சரிசெய்ய முடியாத செவித்திறன் குறைபாடுகளை ஏற்படுத்தும். எனவே, அதிலிருந்து தப்பிக்க, இயர்போன்களை பயன்படுத்திய பின் காதுகளுக்கு சிறிதுநேரம் நாம் ஓய்வை அளிக்க வேண்டும்.