தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

மனித பால் வங்கிகள்: தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு உயிரின் ஊட்டம்...! - மனித பால் வங்கிகள்

தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களின் குறையையும், தாய்ப்பாலற்ற குழந்தைகளின் தவிப்பையும் இந்த மனித பால் வங்கிகள் நிவர்த்தி செய்யும்.

Human Milk Banks Best Substitute for Babies who are Deprived of Mothers Milk
Human Milk Banks Best Substitute for Babies who are Deprived of Mothers Milk

By

Published : Aug 7, 2020, 6:44 PM IST

தாய்ப்பால் கொடுப்பது என்பது ஒரு குழந்தைக்கு உலகில் நுழைந்தவுடன் உணவை உறுதி செய்வதற்கான இயற்கையின் அற்புதமான வழியாகும். இது தாய்க்கும் குழந்தைக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஒரு உறவை மேம்படுத்தும். ஆனால் சில காரணங்களால் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் சில தாய்மார்களும், தாய்ப்பாலற்ற குழந்தைகளும் இருக்கின்றன.

இந்நிலையில் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு புகழ்பெற்ற மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் மகப்பேறியல் நிபுணர், பேராசிரியர் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவவியல், மும்பை காமா, ஆல்பெஸ் மருத்துவமனை மருத்துவர் ராஜஸ்ரீ கட்கேவுடன் பேசினோம்.

மனித பால் வங்கி என்றால் என்ன?

தாய்மார்கள் தாய்ப்பாலை தானம் செய்யும் ஒரு முறை. தாய்ப்பாலற்ற குழந்தைகளுக்கான மாற்று வழி மட்டுமின்றி குழந்தைகளின் வளர்ச்சிக்கான பாதையாகவும் இருக்கும். தாய்ப்பாலை தானம் செய்ய விரும்பும் தாய்மார்கள் சில சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, இந்த பால் பெறப்பட்டு, சேமிக்கப்பட்டு, தேவையான குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

யார் தானம் செய்யலாம்?

- எச்ஐவி, ஹெபடைடிஸ் பி, சிபிலிஸுக்கு ஆகியவை இல்லாத தாய்மார்கள் மட்டுமே கொடுக்க முடியும்.

- ஹீமோகுளோபின் விழுக்காடு 10 கிராம் அல்லது அதற்கு அதிகமாக உள்ள தாய்மார்களும், எந்த ஒரு தீவிர மருத்துவத்தில் பாதிக்கப்படாதவர்களும் கொடுக்கலாம்.

மும்பை காமா, ஆல்பெஸ் மருத்துவமனையின் மனித பால் வங்கி

தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டிலிருந்து, இதுவரை 15 ஆயிரத்து 261க்கும் அதிகமான ஏழை குழந்தைகளுக்கு மனித பால் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆறாயிரம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்கள்

மனித பால் வங்கியின் நன்மை என்ன?

  • பிறக்கும்போதே தாயால் கைவிடப்பட்ட குழந்தைகள் அல்லது பெற்றெடுத்த பின் தாய் இறந்தால், அந்த குழந்தைகளுக்கு இது உதவும்.
  • பிரசவத்திற்குப் பிறகு தாய் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டால், தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையென்றாலும் கொடுக்க முடியும்.
  • தாயிடமிருந்து போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லையென்றால்.
  • பிறந்த உடனேயே தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்.

இந்தியாவில் மனித பால் வங்கி என்ன செய்ய வேண்டும்?

காமா மருத்துவமனையில் மனித பால் வங்கி தொடங்கப்பட்டதற்கு ரூபாய் மூன்று லட்சம் தேவைப்பட்டது. பின்னர் மாதாந்திர செலவுகளுக்காக பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இந்த குறைந்தபட்ச முதலீட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் ஏழை குழந்தைகள் பயனடைகின்றனர்.

குறைந்த செலவில், மகத்தான நன்மை இருக்குபோதிலும், இந்தியாவில் மனித பால் வங்கிகள் குறைவுதான்.

மனித பால் தானம் குறித்த விழிப்புணர்வை எவ்வாறு உருவாக்குவது?

இந்தியாவில் பெண் கல்வியை அதிகரிப்பதன் மூலம் பால் நன்கொடை ஊக்குவிக்க முடியும். இருப்பினும் படிக்காத பெண்கள் கூட தாய்ப்பால் தானம் செய்ய முன்வரலாம். இளம் வயதிலேயே தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் பெண்களுக்கு கற்பிக்கப்பட்டாலோ, தாய்ப்பால் கொடுக்கும் நடைமுறை அந்த இடத்தின் சமூக கலாசாரத்தில் கற்பிக்கப்பட்டாலோ இந்த மாற்றம் நிகழும் என்பதில் ஐயமில்லை

விழிப்புணர்வை எவ்வாறு மேம்படுத்துவது:

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களை ஊக்குவிப்பதன் மூலம் இவை எல்லாம் நிகழும். மாற்றம் ஒன்றே மாறாது. இந்த மாற்றத்திற்கான பாதையை இந்த ஆண்டு தாய்ப்பால் வாராத்திலாவது எடுத்து வைப்போம்.

இதையும் படிங்க...பிரசவித்த தாயின் உடல் பருமனுக்கு என்ன காரணம்? - விளக்குகிறார் மகப்பேறு ஆலோசகர் டீனா (பாகம்-2)

ABOUT THE AUTHOR

...view details