சென்னை:நாட்டு காய்கறிகள் மற்றும் பழங்களை விட ஆங்கில காய்கறிகள் மீதும் பழங்களான பிரக்கோலி, ஸ்ட்ராபெர்ரி மீது நமக்கு எப்போதுமே மோகம் அதிகம் தான். அந்த வகையில் தற்போது ட்ரண்டான வெளிநாட்டு பழம் தான் டிராகன் பழம். பார்ப்பதற்கு டிராகன் போன்று இருப்பதாலே இதற்கு டிராகன் பழம் என்று பெயர் வந்தது. இதன் நிறம் கண்களை கவரும் வகையில் இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணுவர்.
மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட டிராகன் பழம் சுவையானது மட்டுமில்லை சத்தானதும் தான். இதில் தாதுக்கள், விட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடலிற்கு தேவையான சத்துக்களை தருகின்றன. இந்த டிராகன் பழம் சரும பாதுகாப்பிற்கும் உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா?. சரும பாதுகாப்பிற்காக நாம் பல்வேறு அழகு குறிப்புகளை பின்பற்றுகிறோம்.
சரும பாதுகாப்பில் டிராகன் பழம்:அந்த வகையில் சரும பாதுகாப்பிற்காக டிராகன் பழத்தை பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான முகத்தைப் பெறலாம். டிராகன் பழம் சருமத்தில் ஏற்படும் வீக்கத்தை சரி செய்யவும், முகத்தில் படியும் எண்ணெய் பசையையும் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் முகப்பருக்களை நீக்கவும் உதவுகிறது. இவ்வாறு சரும பாதுகாப்பிற்கு உகந்த டிராகன் பழத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியவில்லையா? டோண்ட் வொரி. இப்படி ட்ரை பண்ணுங்க.