சென்னை:நம்மில் பலர் வேலையின் நிமித்தமாக நீண்ட நேரம் ஆன்லைன் மீட்டிங்கில் நேரத்தைச் செலவிட நேரிடும். அதிலும் வெளி நாட்டு நிறுவனங்களுக்காக இந்தியாவில் இருந்து வேலை செய்யும் பலர் நேரம், காலம் பாராமல் மீட்டிங் அட்டன் செய்வது. ஆன்லைனில் தங்களின் பணிகளை மேற்கொள்வது என இருக்கின்றனர். இவர்கள் மீட்டிங்கில் பங்கேற்கும்போது சில முக்கியமான வழிகாட்டுதல்களைப் பின்பற்றலாம். இதன் மூலம் அவர்களின் ஆன்லைன் மீட்டிங் அச்சம் மற்றும் அதிருப்தி குறைந்து காலப்போக்கில் ஆர்வமுடன் பணிகளை மேற்கொள்ளலாம்.
மீட்டிங்கின்போது விழிப்புடன் இருக்க வேண்டும்;மீட்டிங் ஆரம்பித்த சில நொடிகளிலேயே பலர் தூங்கத் தயாராகி விடுவார்கள். இது ஒரு புறம் இருக்க கேமரா மற்றும் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்காமல் பலர் தங்கள் வீட்டில் உள்ள பணிகளை மேற்கொள்ளுவர், சிலர் கேமராவின் முன்பு அமர்ந்தே தூங்கி விடுவர். இதுபோன்ற நேரங்களில் அவர்களின் அந்த செயல்கள் வைரல் வீடியோவாக மாறி விடுவதையும் பார்த்திருப்போம். இந்நிலையில் நீங்கள் மீட்டிங்கில் இருக்கும்போது மற்றொரு வேலை நீங்கள் செய்ய வேண்டும் என நினைத்தால் உங்கள் மைக் மற்றும் கேமராவை ஆஃப் செய்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க:எதிர்பாலினத்தவரிடம் பேச தயக்கமா? ஆரோக்கிமான உரையாடலுக்கு இதுதான் வழி
குடிப்பதற்கு ஏதாவது பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள்;ஆன்லைன் மீட்டிங்கின்போது எனர்ஜி பானங்கள் மற்றும் காபி போன்றவற்றைப் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அல்லது, உங்களை உற்சாகமாக வைக்க உதவும் வகையிலான எந்த பானமாக இருந்தாலும் சரி, ஸ்மூத்திக்கள், ஜூஸ் போன்றவற்றையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இவற்றை நீங்கள் உட்கொள்ளும்போது விழிப்புடனும், சுறுசுறுப்புடனும் மீட்டிங்கில் பங்கேற்க உதவும். முன்னதாக மைக் மற்றும் கேமராவை ஆஃப் செய்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உங்கள் யோசனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்;ஆன்லைன் மீட்டிங்கை சிலர் வெறுக்க முதல் காரணம், அந்த நேரத்தில் நிறுவனத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க அவர்களிடம் எந்தவித யோசனையும் இல்லாததுதான். மீட்டிங்கின்போது பத்து முதல் பனிரெண்டு பேர் கொண்ட குழுவை அமைத்து நிறுவனங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும். தொடர்ந்து ஊழியர்களிடம் அவர்களின் யோசனைகள் மற்றும் கருத்துக்கள் குறித்துக் கேட்டறியும்.
அந்த நேரத்தில் உங்கள் சிந்தனைக்கு எட்டும் சில யோசனைகளை நீங்கள் தைரியமாக அங்குத் தெரிவிக்க வேண்டும். உங்களுக்குத் தொடர்பில்லாத தலைப்பாக இருந்தாலும் அதில் உங்களுக்குத் தெரிந்த விஷயங்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் கருத்தை நம்பிக்கையோடு வெளிப்படுத்த வேண்டும். இது உங்கள் நிறுவனத்திற்கு உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். மற்ற ஊழியர்களில் இருந்து உங்களைச் சிறந்த முறையில் தனித்துவப்படுத்தும்.
இதையும் படிங்க:Indoor Plants Benefits In Tamil: வீட்டிற்குள் செடி வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா? அடுத்த தலைமுறைக்கும் ஆரோக்கியமான வாழ்வு.!