ஐதராபாத் :தீபாவளி என்றாலே முதலில் பட்டாசு தான் ஞாபகத்துக்கு வரும். இந்த பட்டாசினால் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு போன்றவை ஏற்படும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த பட்டாசினால் முகம் பொலிவிழக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?... தீபாவளி, தல தீபாவளி என்று கொண்டாடும் பெண்கள் நிதானமாக உட்கார்ந்து, அழகழகாய் மேக்கப் செய்து, வெளியே வருவர். வீட்டிற்கு திரும்பும் போது முகம் பொலிவிழந்து, சருமம் வறண்டு காணப்படும்.
இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் இந்த பாட்டாசுகளில் இருந்து வெளிவரும் மாசுக்கள், சருமத்தை வறட்சியாக்கி, சுருக்கங்களை உருவாக்குகின்றன. பட்டாசுகளில் உள்ள ரசாயனங்கள் சருமத்தில் படிந்து, எரிச்சல் ஏற்படும். சில சமயங்களில் முகப்பருக்களும் வரலாம். இதிலிருந்து மீள, பட்டாசுகளை தவிர்க்கலாம். நம்மால் பட்டாசுகளை நிராகரிக்க முடியாது என்பதால் இதற்கான மாற்றுவழியை பார்க்கலாம்.
க்ளினஸ் (Cleanse) பயன்படுத்த வேண்டும்:தீபாவளி நாளில் வெளியே சென்று விட்டு, வீட்டிற்கு வந்தவுடன், க்ளன்ஸ் கொண்டு முகத்தை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள மாசுக்கள் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும்.
நீரேற்றத்துடன் இருப்பது அவசியம்:மாசுக்களால் ஏற்படும் முகத்தில் ஏற்படும் அதீத வறட்சியைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் சருமம் ஈரப்பதத்தோடு இருக்கும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருட்கள்:மாசுக்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க, ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த பொருட்களை பயன்படுத்தலாம். குறிப்பாக விட்டமின் சி, ஈ உள்ளடங்கிய ஸ்கின் கேர் பொருட்களை பயன்படுத்தலாம்.