சென்னை:இன்றைய இளம்தலைமுறை பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாதவிடாய் சுழற்சி 28 நாட்களில் நடக்கும். சில நேரங்களில் 26 - 32 நாட்களுக்குள் நடக்கும். 40 நாட்களாகியும் மாதவிடாய் வராமல் இருப்பது, 2 இருமாதங்களாகியும் மாதவிடாய் வராமல் இருப்பது போன்ற நிலை ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular Periods) என்றழைக்கப்படுகிறது.
வேலை பளு காரணமாக பல பெண்கள் இதை கவனிக்க தவறிவிடுகின்றனர். பீரியட் டிராக்கர் செயலியைப் பயன்படுத்தி உங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி காலத்தை கணக்கிட்டு கொள்ளலாம்.உணவுமுறைகள் மற்றும் சில செயல்முறைகள் மூலம் இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையை சரி செய்ய முடியும்.
இஞ்சி (Ginger):இஞ்சியை உணவில் எடுத்து கொள்ள வேண்டும். இஞ்சி டீயாகவும் குடிக்கலாம்.இஞ்சியில் உள்ள விட்டமின் சி மற்றும் மெக்னீசியம் கருப்பை சுருங்க உதவுகின்றன. இதன் காரணமாக மாதவிடாய் வெளிப்படும்.
பப்பாளிக்காய் (Raw Papaya): பப்பாளிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மாதவிடாயை சீராக்கலாம். பப்பாளிக்காயில் உள்ள பாப்பை என்ற என்சைம் பெண்களின் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள கரோட்டின் மாதவிடாய்க்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டுகிறது.
இலவங்கப்பட்டை (Cinnamon):பட்டை உடலை வெப்பமாக்க உதவுகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மாதவிடாய் தோன்றுவதற்கு உதவுகிறது.