தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

தீபாவளி ஸ்பெஷல்.. சர்க்கரை வள்ளிக்கிழங்கு வெச்சு பாயாசம்… ட்ரை பண்ணி பாருங்க!

Diwali sweet: குறைவான நேரத்தில் மிக சுவையான முறையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து வீட்டிலேயே பாயாசம் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்...

சர்க்கரை வள்ளி கிழங்கு வெச்சு பாயாசமா? தீபாவளி ஸ்பெஷல்…ட்ரை பண்ணி பாருங்க!
சர்க்கரை வள்ளி கிழங்கு வெச்சு பாயாசமா? தீபாவளி ஸ்பெஷல்…ட்ரை பண்ணி பாருங்க!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 2:26 PM IST

சென்னை:தீபாவளி என்றாலே நாம் எப்போதும் ஒரு சில ஸ்வீட்ஸ்களை தான் வருடா வருடம் செய்து கொண்டு இருப்போம். அப்படி இல்லாமல் இந்த வருட தீபாவளித் திருநாளில், நம் இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல உள்ளத்தை இன்ப ஒளியில் நிறைக்க இந்த சுவையான சக்கரவள்ளி கிழங்கு பாயசத்தை செய்து பாருங்கள்.

பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

சர்க்கரை வள்ளி கிழங்கு -2

வெல்லம் - அரை கப்

நெய் -தேவையான அளவு

முந்திரி, பாதாம், திராட்சை- தேவையான அளவு

சாரப் பருப்பு - தேவையான அளவு

பால் - 3 கப்

உப்பு - 1 பின்ச்

பாயாசம் செய்யும் முறை: ஸ்டெப் 1: முதலாவதாக அரை கப் வெல்லத்தை எடுத்து அரை கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கலந்து கொள்ளவும். வெல்லம் நன்றாக கரைந்த பின்னர், வடிகட்டி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பின், இரண்டு மீடியம் சைஸ் சக்கரவள்ளி கிழங்கை தோல் சீவி, நன்றாக துருவி எடுத்து வைத்து கொள்ளவும்.

ஸ்டெப் 2: அடுப்பில் ஒரு கடாய் வைத்து , சூடானதும் 1 டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரி, பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை மற்றும் உங்களுக்கு பிடித்த ட்ரை பூருட்ஸ்களை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பின், தேவையான அளவு சாரப் பருப்பு சேர்த்து கருகவிடாமல் அனைத்தையும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

ஸ்டெப் 3: அதே பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு துருவி வைத்த சக்கரவள்ளி கிழங்கை சேர்த்து கொள்ளவும். கிழங்கு நிறம் மாறி , பாதி அளவு வெந்தவுடன் 3 கப் பால் சேர்த்து 4 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக விடவும். பாலில், கிழங்கு நன்றாக வெந்து, குளைந்து பால் கட்டியாக காணப்படும்.

ஸ்டெப் 4: பாயாசத்தில் உங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 1 நிமிடம் வேக விடுங்கள். கடைசியாக, உருக்கி ஆரவைத்து எடுத்து வைத்த வெல்ல பாகை பாலில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் ஒரு கொதி வந்தவுடன் தீயை அனைத்துவிடவும். (குறிப்பு: வெல்லம் பாகை சேர்த்தவுடன் பாலை கொதிக்கவிடக்கூடாது, மிதான தீயில் வைத்து கொள்ளவும்.)

ஸ்டெப் 5: இறுதி கட்டமாக நெயில் வறுத்து வைத்த ட்ரை பூருட்ஸை கலவையில் போட்டல் நாவிற்கு மட்டுமல்லாமல் உள்ளத்திற்கு இன்பம் தரும் சுவையான சக்கரவள்ளி கிழங்கு பாயாசம் ரெடி.

டிப்ஸ்: ரெடியான பாயசத்தை சூடாக சாப்பிடுவதை விட ப்ரிட்ஜ்ல் வைத்து குளிர்ச்சியாக சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். ட்ரை பண்ணிப்பாருங்க. அனைவருக்கும் சுவையான தீபாவளி நல்வாழ்த்துகள்!

இதையும் படிங்க:தீபாவளி பலகாரங்களால் ஆபத்து? உஷாரா இல்லைன்னா உடம்பு கெட்டுப்போயிடும்!

ABOUT THE AUTHOR

...view details