தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

காஜூ கட்லி தயாரிப்பது இவ்வளவு சுலபமா? ட்ரை பண்ணி பாருங்க.. அசந்து போவீங்க.! - தீபாவளி பலகாரம்

தீபாவளி திருநாளை முன்னிட்டு வீட்டிலேயே காஜூ கட்லி தயாரித்து பண்டிகையை சிறப்பியுங்கள்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 4:23 PM IST

சென்னை:காஜூ கட்லி இது ஒரு வட இந்திய இனிப்பு பலகாரம். இந்தி மொழியில் காஜூ என்றால் அதன் தமிழாக்கம் முந்திரி பருப்பு இதன் மூலம் தயாரிக்கப்படும் இனிப்பைதான் காஜூ கட்லி என அழைக்கிறார்கள். காஜூ என்ற சொல்லின் பிறப்பு போர்த்துகீசிய மொழியில் இருந்து வந்தது. இந்த காஜூ அல்லது முந்திரி அகாஜூ எனவும் அழைக்கப்படுகிறது. துபியன் வார்த்தையான அகாஜூவின் விளக்கம் தன்னை தானே உற்பத்தி செய்யும் கொட்டை என்பதாகும்.

இந்த முந்திரி பருப்பில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கும் நிலையில் சுவையிலும் இதற்கு ஈடு இது மட்டும்தான். அதை வைத்து ஒரு வகையான இனிப்பு பலகாரம் செய்தால் எப்படி இருக்கும் என்ற யாரோ ஒருவரின் கண்டுபிடிப்புதான் இந்த காஜூ கட்லி. அது மட்டும் இன்றி மிகவும் காஸ்ட்லியான ஸ்வீட் காஜூ கட்லி என்றே கூறலாம். முந்திரி பருப்பை மட்டுமே வைத்து தயாரிக்கப்படும் இந்த காஜூ கட்லி சுவையில் மட்டும் அல்ல விலையிலும் கொஞ்சம் தூக்கல்தான். சரி இந்த காஜூ கட்லியை வீட்டிலேயே எப்படி தயார் செய்வது எனப் பார்க்கலாம்.

காஜூ கட்லிக்கு தேவையான பொருட்கள்;

  • 1. 1/2 கப் பொடித்த முந்திரி
  • 1/2 கப் தண்ணீர்
  • 1. 1/2 தேக்கரண்டி நெய்
  • 1 கப் சர்க்கரை
  • 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி

செய்முறை:முந்திரி பருப்பை எடுத்து மிக்சியில் போட்டு பாகம்போல பொடிக்க வேண்டும். அதிகமாக பொடித்தால் எண்ணை விடும் தன்மை கொண்டது முந்திரி பருப்பு. அதே நேரம் கரடு முரடாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த காஜூ கட்லி தயாரிக்க தேர்வு செய்யும் பாத்திரத்திலும் கவனம் வேண்டும். பாத்திரம் நல்ல அடிக்கனம் உள்ளதாகவும், நல்ல அகலம் உள்ளதாகவும் இருக்க வேண்டும். கிண்டுவதற்கான கரண்டி நல்ல தட்டையானதாகவும், கனமானதாகவும் இருக்க வேண்டும்.

அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். அதில் 1 கப் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் கிளர வேண்டும். சர்க்கரை பாகு கையில் எடுத்தால் ஜாம்போல ஒட்டும் பதத்திற்கு வந்த உடன் அதில் ஏற்கனவே பொடித்து வைத்திருக்கும் 1. 1/2 கப் முந்திரியை போட்டு மிதமான சூட்டில் பாகம்போல் கிண்ட வேண்டும். இடைவிடாது கிண்டி அதனுடன் 1. 1/2 தேக்கரண்டி நெய் மற்றும் 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் நன்றாக கிண்டி ஓரளவு கெட்டியான உடன் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

கொஞ்சம் சூடு ஆறியப்பிறகு, அந்த காஜூ கட்லி கலவையை எடுத்து சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல நன்றாக பிசைந்து, அந்த மாவை ஒரு ட்ரே எடுத்து அதில் வைத்து சப்பாத்தி கட்டை கொண்டு உருட்டவும். பிறகு டைமண்ட் வடிவத்தில் துண்டுகளாக வெட்டி பரிமாரவும்.

இதையும் படிங்க:தீபாவளிக்கு என்ன ஸ்வீட் செய்யலாம்னு யோசிச்சிட்டு இருக்கீங்களா.? இதை ட்ரை பண்ணுங்க.!

ABOUT THE AUTHOR

...view details