தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

உங்க மொபைல் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா?... எப்படி தெரிந்து கொள்வது! - மொபைல் ஹேக்கை தடுப்பது எப்படி

How to Identify whether your Mobile hasbeen Hacked: உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டிருப்பதை எவ்வாறு கண்டறியலாம். ஒருவேளை உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டிருந்தால் அதை எவ்வாறு சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.

How to Identify whether your Mobile hasbeen Hacked
மொபைல் ஹேக் செய்யப்பட்டுருப்பதை கண்டுபிடிப்பது எப்படி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 12:31 PM IST

சென்னை:அமெரிக்க மொபைல் நிறுவனமான ஆப்பிள் சமீபத்தில், “அரசாங்க உதவியுடன் மொபைலை ஹேக் செய்பவர்கள், ஐ போனையும் ஹேக் செய்யலாம்” என்று ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டது. இந்த அறிவிப்பு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

உன் நண்பன் யாரென்று சொல் உன் கேரக்டரை சொல்கிறேன். உன் எதிரி யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்று ஒரு டயலாக் இருக்கிறது. எதிரி பற்றி கூறினால், நாம் யாரேன்று முழுமையாக தெரிந்துவிடும். ஆனால் இப்போது அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் விதமாக மொபைல் வந்துவிட்டது. நம் மொபைல் ஒன்றே போதும். நமக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, யாரை பிடிக்கும், நம் பேங்க் அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் உள்ளது உள்ளிட்ட அத்தனை ரகசியங்களும் அம்பலமாக்க.

நம் ரகசியங்கள் திருடப்படுவதை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. ஆகையினால் விழிப்புடன் இருக்க வேண்டும். மொபைல் ஹேக் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு. இதில் உங்கள் மொபைல் ஹேக் செய்திருந்தால் அதை எப்படி கண்டறிய வேண்டும் என்றும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் பார்க்கலாம்.

ஹேக் செய்யப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள்:

  • அன்லிமிடட் டேட்டா ரீசார்ஜ் செய்திருந்தால், டேட்டா எவ்வளவு காலியாகிறது என்பதைப் பார்க்க வேண்டும். நீங்கள் உபயோகப்படுத்தாமலே டேட்டா அதிகமாக காலியாகிறதா என்று பார்க்க வேண்டும். அதிகமான டேட்டா காலியாகியிருக்கும் பட்சத்தில் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது என்று அறியலாம்.
  • நீங்கள் இணையத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் போது, தேவையற்ற பாப் - அப்கள் வந்தால் அதிக கவனம் தேவை. அவ்வாறு வரும் போது அவற்றை கவனமாக மூட வேண்டும். இப்படி அடிக்கடி பாப் - அப்கள் வந்தால் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.
  • நீங்கள் டவுன்லோடு செய்யாத ஆப்கள் உங்கள் மொபைலில் இருப்பின் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.
  • குத்துமதிப்பான எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் கவனம் தேவை. வெவ்வேறு எண்களில் இருந்து தாறுமாறாக அழைப்புகள், மெசேஜ் வந்தால் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.
  • உங்கள் மொபைலின் வேகம் குறைந்தாலோ, எதாவது ஆப்ஸ் திறக்கப்படாமல் இருந்தாலோ உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.
  • நீங்கள் உபயோகப்படுத்தாமலே உங்கள் மொபைல் சூடாகிறது என்றால் அதிக கவனம் வேண்டும். உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.
  • மொபைல் ஸ்கிரின் லாக் (Screen Lock), வைரஸ் தடுப்பு (Virus Protection) போன்ற பாதுகாப்பு அம்சங்கள் முடக்கப்பட்டிருந்தால் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.

உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தால் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்:

  • மொபைல் வைஃபை (WIFI), மொபைல் டேட்டாவை ஆஃப் செய்ய வேண்டும்.
  • வைரஸ் தடுப்பு மென்பொருளை பயன்படுத்த வேண்டும். உங்கள் மொபைலில் இல்லையெனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
  • சந்தேகத்திற்கிடமான செய்திகளை பதிவிறக்கம் செய்வதே மால்வேர் (ஹேக் செய்யும் மென்பொருள்) வருவதற்கான முக்கிய காரணம். மொபைல் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக உணரும் பட்சத்தில், உங்கள் மொபைலில் உள்ள ஆப்ஸை பார்க்க வேண்டும். நீங்கள் பதிவேற்றம் செய்யாத, அறிமுகம் இல்லாத ஆப் இருக்கும் பட்சத்தில் அதை கவனமுடன் நீக்க வேண்டும். அந்த ஆப் எந்த கணக்கில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படுள்ளது என்பதைப் பார்த்து, அந்த கணக்கின் பாஸ்வோர்டை மாற்ற வேண்டும்.
  • அதன் பின் உங்கள் மொபைலை ரீ செட் (Reset) செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்கள் மொபைலில் உள்ள தொடர்புகள், புகைப்படங்கள் போன்றவை அழிந்து விடும். ஆகையினால் அவற்றை காபி (Copy) செய்து கொள்ளலாம்.
  • வங்கி கணக்குகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றில் அதிக கவனம் தேவை.
  • மொபைல் ஹேக் செய்யப்பட்டிருப்பதை எவ்வாறு சரி செய்வது என்று உங்களுக்கு தெரியாவிட்டால் இணைய பாதுகாப்பு நிபுணர்களின் உதவியைப் பெறலாம்.

இதையும் படிங்க:காற்று மாசு புற்றுநோய்க்கு வழிவகுக்குமா? - எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details