சென்னை:இரவில் தூக்கத்தில் காதுகளுக்கு அருகே வந்து ரீங்காரம் செய்து தொல்லை தருவது மட்டும் இன்றி உடல் முழுவதும் ஊசி போட்டு புதிய நோய்களை வரவழைப்பதிலும் சரி கொசுக்களுக்கு இணை கொசுக்கள்தான். வருடத்தின் 360 நாளும் கொசுத் தொல்லை இருந்தாலும் குறிப்பாக மழைக்காலங்களில் அவைகளின் அட்டகாசத்தை பொறுத்துக்கொள்ளவே முடியாது. இந்த கொசுவை விரட்டச் சந்தைகளில் விற்கப்படும் கொசு விரட்டிகளை வீடுகளில் பயன்படுத்துவார்கள்.
கொசுத் தொல்லை தாங்கலயா? இதைக் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.. செம்ம ரிசல்ட் கிடைக்கும்.! - mosquito problem news in tamil
how to get rid of mosquitoes: மழைக்காலம் தொடங்கி விட்டது, கூடவே கொசுக்காலமும் வந்து விட்டது என அச்சப்படுகிறீர்களா.? உங்கள் வீடுகளில் கொசுக்களை விரட்டக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில வழிகாட்டுதல்களை முயற்சித்துப்பாருங்கள்.
Published : Sep 22, 2023, 4:53 PM IST
|Updated : Sep 22, 2023, 4:59 PM IST
ஆனால் இந்த கொசு விரட்டிகளில் உள்ள ரசாயனங்கள் நமது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதுடன், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பலருக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகை செய்கிறது. சரி கொசுக்களை விரட்ட வேறு என்னதான் செய்வது என யோசிக்கிறீர்களா.. கொசுவை விரட்ட சில இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றிப்பாருங்கள், அது நல்ல பலன் தரும் என்கிறார்கள் நிபுணர்கள்.
- வீட்டில் உள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடிவிட்டு கற்பூரம் மற்றும் அதனுடன் வேப்ப இலைகளைப் போட்டு வீட்டிற்குள் சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை புகையிடுங்கள். வேப்ப இலை கிடைக்கவில்லை என்றால் கற்பூரம் மட்டும் போட்டு புகையிட்டாலே போதுமானது.
- ஒரு மண் பானையில் கரிக்கட்டையைப் போட்டு நெருப்பை உருவாக்கி அதில் கடுக்காய் பொடி, வேப்பம்பூ பொடி மற்றும் உப்பு ஆகிய மூன்றையும் சாம்பிராணி போடுவதுபோல் கொஞ்சம், கொஞ்சமாகப் போட்டு வீடு முழுவதும் புகையிடுங்கள்.
- கரிக்கட்டை கிடைக்கவில்லை என்றால், உங்கள் வீட்டில் உள்ள நறுமண விளக்கில், கற்பூரம், சாம்பிராணி, வேப்ப எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், லெமன் கிராஸ் ஆயில், தேயிலை எண்ணெய், லாவெண்டர் எண்ணெய் சேர்த்து விளக்கிடுங்கள்.
- நான்கு பூண்டு பற்களை இடித்து சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்த்து அதனுடன் சிறிது கற்பூரம் சேர்த்து விளக்கேற்றினால், அந்த புகை கொசுக்களை அழிக்கும் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.
- வேப்பெண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய்யைக் கலந்து உடலில் பூசினால் சுமார் எட்டு மணி நேரம் கொசுக்கடியில் இருந்து தப்ப முடியும்.
- ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் மூன்று டேபிள் ஸ்பூன் எப்சம் சால்ட் சேர்த்துக் குளித்தால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.
- வீட்டிலோ அல்லது அருகிலோ தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கினால், துளசி சாற்றைத் தண்ணீர் மற்றும் கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தெளித்து வந்தால் அது நல்ல பலன் தரும்.
- வீட்டைச் சுற்றி துளசி, வேம்பு, யூகலிப்டஸ் போன்ற மரங்கள் இருந்தால், அங்குக் கொசுக்கள் உருவாவது குறையும்.
- கற்றாழைக் கூழ் கொசு கடித்த இடத்தில் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- துளசி இலை அல்லது வேப்ப இலையை அரைத்து கொசு கடித்த இடத்தில் தடவினால், அந்த இடத்தில் சொறி, அரிப்பு போன்றவை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க:World Rose Day 2023: புற்று நோயாளிகளுக்கு ரோஜாவை பரிசளித்த மெலிண்டா ரோஸ்.. அன்பைப் பகிருங்கள் ஆயுளை வெல்லுங்கள்.!