சென்னை:பெண்கள் தலை முடி முதல் பாதம் வரை தன்னை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுத்தமாக இருக்க வேண்டும் நினைக்கின்றனர். ஆனால் வேலைப் பளுவால் செய்ய இயலாமல் போய்விடுகிறது. அப்படியே அழகுபடுத்த நினைத்தாலோ கூந்தலையும் முகத்தையும் மட்டுமே அழகுபடுத்திக் கொள்கின்றனர்.
கால் பாதங்களைச் சுத்தப்படுத்துவதையோ அல்லது அழகுபடுத்துவதையோ தவிர்த்துவிடுகின்றனர். கால் பாதங்களைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று தோன்றினாலும் அதிக செலவு ஆகுமே என்ற பயத்தில் பார்லருக்கு செல்வதையும் நிராகரித்து விடுகின்றனர். இந்த வேளையில் அருமையான அழகுக் குறிப்புகளை உங்களுக்காக எடுத்து வந்துள்ளோம். பியூட்டி பார்லருக்கு செல்லாமல், குறைந்த செலவில் வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம் என்று பார்க்கலாம்.
ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டும் பெடிக்யூர் செய்யலாமா...
- முதலில் பாதங்களைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ளவும்.
- ஒரு அகலமான பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக்கொள்ளவும். பாதியளவு ஊற்றினால் போதுமானது.
- நீரில் சிறிதளவு உப்பு மற்றும் அரை எலுமிச்சை சேர்த்துக் கலந்து, அதில் பாதங்களை 20 நிமிடம் வைக்க வேண்டும். (நீரில் உள்ள உப்பு, கால்களில் உள்ள அழுக்குகள், நுண்ணுயிர்கள் போன்றவற்றை நீக்குகிறது. மேலும் சருமத்தை மென்மையாக்குகிறது.
- பிரஷ் வைத்து பாதங்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.
- 20 நிமிடங்கள் கழித்து, பாதங்களில் ஈரம் இல்லாமல் துடைத்து விட வேண்டும்.
- முன்னதாக போட்ட நெயில் பாலிஷ் இருப்பின், நெயில் பாலிஷ் ரீமுவர் (Nail Polish Remover) உதவியுடன் பழைய நெயில் பாலிஷை அகற்ற வேண்டும். நகங்கள் சற்று நீளமாகவோ அல்லது சீரற்ற முறையிலிருந்தாலோ, நெயில் கட்டர் மூலம் வெட்டி விடலாம்.
பாதங்களை சுத்தப்படுத்திக்கொள்ளவும் - இதனை அடுத்து பியூமிஸ் ஸ்டோனை வைத்து, குதிங்கால் போன்றவற்றில் நன்கு சுத்தப்படுத்த வேண்டும். அழுக்குகள் நீங்கும் வரை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும்.
- அடுத்ததாக ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டும். ஸ்க்ரப்பிங் செய்வதற்கு, ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4 ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் ஏழுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த மிக்ஸை கால் விரல்கள் மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்து 5 நிமிடத்திற்குப் பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.
- கடைசியாக, உங்களுக்கு விருப்பமான மாய்ஸ்சரைசரை கால்களில் தடவி, உலர விடவேண்டும். இப்போது உங்களுக்குப் பிடித்த நெயில் பாலிஷை நகங்களில் போட்டுக்கொள்ளலாம். கால் பாதங்கள் சுத்தமாகவும், அழகாகவும் இருக்கும்.
பெடிக்யூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
- கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படாது.
- பூஞ்சை தொற்றுகள் ஏதும் ஏற்படாது.
- இறந்த செல்களை அகற்றும்.
- பாதங்கள் சுத்தமாகவும், அழகாகவும் இருக்கும்.
இதையும் படிங்க:இப்படி பண்ணிட்டு இருக்கீங்களா?... சருமத்தை பராமரிப்பதாகக் கூறி நாம் செய்யும் தவறுகள்!