சென்னை:மனிதர்களின் வளர்ச்சிக்கும், வாழ்விற்கும் உணவு என்பது முக்கியமான ஒன்று.நலமாக வாழ காய்கறிகளையும், பழங்களையும்உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவர். அவ்வாறு நாம் உண்ணும் பழங்களும், காய்கறிகளும் இயற்கையாக விளைந்தவையா? இந்த காய்கறிகளை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்குமா? அல்லது நோய் கிடைக்குமா? என்ற குழப்பத்தில் ஆர்கானிக் பழங்களையும், காய்கறிகளையும் தேடி தேடி வாங்குவர்.
அஸ்வினி பூச்சி தொல்லை: நாளடைவில் வீட்டிலேயே தோட்டம் அமைத்து, வீட்டிலேயே ஃப்ரெஷ்ஷான காய்கறிகளை பறித்து சமைத்து உண்ணலாம் என்று முடிவெடுப்பர். மாடித்தோட்டமும் வைப்பர். நர்சரியிலிருந்து வாங்கி வரும் போது நன்றாக இருக்கும் செடிகள் வீட்டில் வைத்த சில நாட்களிலேயே வளர்ச்சி குன்றி விடும். எதனாலனு போய் பார்த்தா... பூச்சி. செடிகளில் அஸ்வினி பூச்சிகளின் ஆதிக்கம் நிறைந்திருக்கும்.
பூச்சிகளை ஒழிக்க டிப்ஸ்: ஆசை ஆசையாய் வாங்கி வந்த செடியை இழக்க மனமில்லாமல், சிலர் பூச்சி மருந்தை தெளிப்பர். பூச்சி மருந்து கலந்த காய்கறிகளையா நாம் விரும்பினோம். இன்னும் சிலர் மனம் வெறுத்து அதை அப்படியே விட்டு விடுவர். இனி அந்த கவலை வேண்டாம். அஸ்வினி பூச்சிகளிலிருந்து செடிகளை பாதுகாக்க அருமையான ஐடியா இருக்கு. நம்ம வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே, இயற்கையான முறையில் பூச்சி மருந்தை தயாரிக்கலாம். இந்த டிப்ஸ் மாடித்தோட்டம் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமில்ல, வீட்டில் சின்னதா பூ செடி, காய்கறி வைத்துள்ளவர்களுக்கும் தான்.