சென்னை:மழை எல்லாரும் பிடித்த ஒன்றே, அனைவரும் விரும்பும் ஒன்றே. குறிப்பாக இளம்பெண்களுக்கு மழை ஒரு கொண்டாட்டத்தை உருவாக்கும். ஆனால் இந்தமழைக்காலம் மேக்கப் பிரியர்களுக்கும், மணப்பெண்களுக்கும் ஒரு மணி நேரம் உட்கார்ந்து போட்ட மேக்கப் கலைந்து விடுமோ என்ற பயம், கவலை இருக்கும். இனிமேல் அத்தகைய கவலை தேவை இல்லை. மழைக்காலத்திற்கு ஏற்றவாறு, மழையில் அழியாதவாறு எப்படி மேக்கப் போடலாம். தற்போது திருமண சீசன் வருவதால் மணப்பெண்கள், எந்த வகையான மேக்கப்பை தேர்வு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
ஸ்கின் கேர் பண்ணுங்க:மழைக்காலத்தில் சருமம் பொலிவின்றி வறண்டு காணப்படும். ஆகையினால், க்ளன்சர், டோனர் பயன்படுத்தலாம். சரும ஈரப்பதத்திற்கு மாய்ஸ்சரைசர் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இவை சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்தி, சரும பராமரிப்புக்கு உதவும்.
வாட்டர் ப்ரூப் மேக்கப் போடலாம்:தற்போது வாட்டர் ப்ரூப் மேக்கப் போன்றவை வந்து விட்டன. ஆகையினால் மணப்பெண்கள் வாட்டர் ப்ரூப் மேக்கப், ஹெச் டி மேக்கப் (HD Makeup) போன்றவற்றை பயன்படுத்தலாம். மாடல்கள், மணப்பெண்கள் என பலர் ஏர்பிரஷ் மேக்கப்பை தேர்வு செய்கின்றனர். ஆனால் ஏர்பிரஷ் மேக்கப்பை விட ஹெச்.டி மேக்கப் சிறந்தது. நீண்ட நேரத்திற்கு நிலைத்திருக்கும்.