சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிப்பதாக இருந்தாலும் சரி அல்லது தோல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதாக இருந்தாலும் சரி, நாம் வீட்டு வைத்தியம் பற்றி பேசும் போது சமையலறை பொருட்களில் தேன் எப்போதும் முதலிடத்தை வகுக்கிறது.
ஆயுர்வேதத்திலும், தேனின் நன்மைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. அனைத்து கோணங்களிலும் ஆரோக்கியத்திற்கு இது வழிவகுக்கிறது. தேனை சில பொருள்களுடன் இணைத்து அதன் பண்புகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை அறிவோம்.
ஆயுர்வேதத்தின் கூறுகளின் படி, தேனுக்கு சொந்த ஆற்றல் இல்லை. அவை எந்த பொருள்களுடன் இணைக்கப்படுதோ, அதற்க்கேற்ப தன்னை வடிவமைத்துக்கொள்ளும். மேலும் அவை வெப்பமானதாகவும் இருக்கலாம், குளிர்ச்சியானதாகவும் இருக்கலாம். அதனால், பல ஆயுர்வேத மருந்துகளுக்கு, தேன் ஒரு சிறந்த கூறாக கருதப்படுகிறது. பிற பொருள்களுடனும் சரி, தனித்தும் சரி, தேன் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
ஊட்டச்சத்துக்கள்
தேனின் ஊட்டச்சத்து குறித்து நாம் பார்த்தால், அதில், பிரக்டோஸ் (Fructose), நியாசின் (Niacin), கார்போஹைட்ரேட் (Carbohydrates), ரிபோஃப்ளேவின் (Riboflavin), வைட்டமின் பி6 (Vitamin B6), வைட்டமின் ஏ (Vitamin A), வைட்டமின் சி (Vitamin C), இரும்பு (Iron), மெக்னீசியம் (Magnesium), கால்சியம் (Calcium), கலோரிகள் ( calories), சோடியம் (Sodium), பொட்டாசியம் (Potassium) மற்றும் நார்ச்சத்து என பல்வேறு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. மேலும் இதில், நுண்ணுயிர் எதிர்ப்பி (Antibiotic) மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் (Anti-oxidant) பண்புகள் அதிகம் காணப்படுகின்றன.
தேனின் நன்மைகள்
இது குறித்து மும்பையில் உள்ள நிரோக் ஆயுர்வேத மருத்துவமனையின் ஆயுர்வேத நிபுணர் மருத்துவர் மனிஷா காலே கூறுகையில், “ஆயுர்வேதத்தில் சளி, விஷம், விக்கல் போன்றவற்றை நீக்குவதற்கு தேன் சிறந்ததாக கருதப்படுகிறது. தேனை உட்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், அழகும் அதிகரிக்கும்.
பல வீட்டு வைத்தியங்களில் தேன் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட முறையில் நன்மை பயக்கும். உதாரணமாக, வெதுவெதுப்பான நீரில் தேனை உட்கொள்வது அல்லது பச்சையாக உட்கொள்வது மலச்சிக்கல், தொண்டை புண், எடை இழப்பு போன்ற செரிமான பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது.
அதே நேரத்தில், உளுந்து மாவு, மஞ்சளுடன் தேனை கலந்து ஃபேஸ் மாஸ்க் போட்டுக்கொண்டால், பளபளப்பான சருமம் கிடைக்கும். அல்லது தேனை மட்டும் தடவிக் கொண்டால், தோல் சார்ந்த பிரச்னைகளை வராமல் தடுத்து , சருமம் ஜொலிக்கும்.
மேலும் தேன் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், காயங்களை ஆற்றவும், நச்சு நீக்கவும், பசியை மேம்படுத்தவும் மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதர பொருள்களுடன் தேனின் தன்மை
ஆரோக்கிய நன்மைகளின் அடிப்படையில், தேன் பல மூலிகைகள் மற்றும் பொருள்களுடன் இணைந்து சிறந்து விளங்குகிறது. அதில் சில.